September 18, 2021

மெரினா சிவாஜி சிலையை அகற்றலாம்: தமிழக அரசு பதில்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தமிழக அரசு பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதில், காமராஜர் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் போது, மற்ற மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை இந்த சிலை மறைப்பதால், இந்த பகுதியில் அதிக விபத்துகள் நேர்ந்துள்ளன என்றும், இதனால் அநதச் சிலையை அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
nov 26 - sivaji mini
கடந்த 2006-ல் சீனிவாசன் என்பவர் ‘போக்குவரத்துக்கு இடையூறாக மெரீனாவில் இந்த இடத்தில் சிலை வைக்க தடை விதிக்க வேண்டும்’ எனறு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அப்போது நீதிமன்றம் தடை விதிக்காததால் சிலையை திட்டமிட்டபடி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார். ஆனாலும் இந்த வழக்கைத் தாக்கல் செய்த சீனிவாசன் இப்போது உயிருடன் இல்லாத நிலையில் தற்போதும் வழக்கை நடத்தி வரும் அவருடைய வழக்கறிஞர் காந்தி இது தொடர்பாக கூறுகையில் ”சிவாஜி மிகச் சிறந்த நடிகர் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. மாபெரும் தலைவர் மகாத்மா காந்தியின் சிலை அருகில் சிவாஜி சிலை இருக்கிறது. காந்தியின் முக்கியத்துவத்தைக் குறைத்து, சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது..பாரதியார், பாரதிதாசன், வ.உ.சிதம்பரனார், காமராஜர் என பலருக்கு கடற்கரையில் ஓரத்தில்தான் சிலை வைத்திருக்கிறார்கள். காந்தியின் சிலைகூட அப்படித்தான் இருக்கிறது. ஆனால், சிவாஜி சிலையை மட்டும் எப்படி சாலையின் நடுவில் அமைத்தார்கள்? அந்தச் சிலைகள் எல்லாம் கறுப்பு நிறத்தில் இருக்க… சிவாஜி சிலை மட்டும் தங்கத்தைப் போல மினுமினுக்கிறது.சட்டப்படி பார்த்தால் நெடுஞ்சாலையில் சிலை வைக்க முடியாது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவே இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியே வழக்கை சந்திக்கிறோம்” என்றார்.

இதற்கிடையில் டிஜிபி அலுவலகம் அருகே உள்ள சிவாஜி சிலையை அகற்றக்கூடாது திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் அளித்திருந்த நிலையில்தான் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடததக்க்து. . .