October 18, 2021

மெட்ரிக்குலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இந்திய அஞ்சல் துறையின் தமிழக அஞ்சலக பிரிவில் காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 227
indian post logo
பணி: Multi-Tasking Staff(MTS)

வயதுவரம்பு: 05.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மெட்ரிக்குலேசன் மற்றும் அதற்கு இணையான தகுதி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + கிரேடு சம்பளம் ரூ.1800 மற்றும் இதர சலுகைகள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25

தேர்வுக் கட்டணம்: ரூ.175

விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadupost.nic.in, www.indiapost.gov.in போன்ற இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 05.03.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tamilnadupost.nic.in/rec/MTS_Notification.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.