October 16, 2021

மூளை கேன்சரால் பாதித்த மகனுக்காக ஒருநாள் ஸ்பைடர் மேனான அப்பா! வீடியோ

இங்கிலாந்தில் உள்ள பேசிங்ஸ்டாக் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வருகிறார் இவரது மகன் பெயர் ஜெயடென் வயது 4. சிறுவன் மீது அவரது தந்தை அளவு கடந்த பாசம் வைத்துள்ளார்.சிறுவன் ஜெயடென்னுக்கு ஸ்பைடர் மேன் என்றால் மிகவும் பிடிக்கும் அவனது பெட்ரூமில் ஸ்பைடர் மேன் படம் தான் இருக்கும்.அந்த அளவிற்க்கு ஸ்படைர்மேனின் தீவிர ரசிகராக இருந்துள்ளான் அச்சிறுவன். சிறுவன் நீண்ட நாளுக்கு வாழ கொடுத்த வைக்கவில்லை காரணம் அவனுக்கு மூளை கேன்சர் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இதனை அவனது தந்தை வில்சனிடம் கூறினார்.
spider father
முதலில் மறுத்த வில்சன், சிறுவன் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று கூறினார். ஆனால் சிறுவன் இன்னும் 12 மாதங்கள் வரை தான் வாழ முடியும் என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். டாக்டர்கள் தொடர்ந்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.சிறுவனின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்க அவரது தந்தை ஏதாவது செய்ய வேண்டும் என்று குடும்பத்தினரிடம் ஆலோசனை நடத்தினார். குடும்பத்தினரின் ஆலோசனைப்படி அவனது 5-வது பிறந்தநாளில் சிறுவன் விரும்பிய ஸ்படைர்மேனாக மாற ஆசைபட்டார்.

அவனது 5-வது பிறந்த நாளில் சர்பிரைசாக வில்சன், ஸ்பைடர் மேனாக தோன்றி மாடியில் இருந்து குதித்து சிறுவனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை தற்போது சிறுவனின் ஆயுள் காலம் முடியும் தருவாயில் உள்ளதால் கவலையில் மூழ்கி உள்ளார்.ஸ்படைர்மேன் சட்டை தைப்பதற்காக சிறுவன் பிறந்த நாளில் முன்னிட்டு மூன்று வாரங்களுக்கு முன்பாக ஸ்பைடர் மேன் சட்டையை தைத்துள்ளார் வில்சன்.சிறுவனின் பிறந்த நாளில் அவனது தந்தை வில்சன் எடுத்த ஸ்பைடர் மேன் வீடியோவை இதுவரை பேஸ்புக் மற்றும் வாட்ஸப்பில் 20,000 ஆயிரம் முறை பார்க்கபட்டுள்ளதாக வில்சன் தெரிவித்தார்.

 

வீடியோ பார்க்க:https://www.youtube.com/watch?v=NLzZlwON9EM