‘மூட்டு வலி’ வர முக்கியமான காரணங்களும் கொஞ்சம் தீர்வும்!

நம் முழங்காலில் உள்ள மூட்டு, இரண்டு பக்க எலும்புகளுக்கு இடையே பந்து போல உருண்டு கொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இரு எலும்புகளுக்கும் இடையே உள்ள சவ்வு சேதம் அடைவதால், மூட்டு இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இது வலி, வீக்கத்தில் தொடங்கிக் கடைசியில் நடக்க முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறது.
23 - health knee pain
மூட்டு வலிக்கு முதுமை மட்டுமே காரணம் அல்ல. பாரம்பரியத் தன்மையாலும், 80 சதவிகிதம் பேருக்கு மூட்டுவலி ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. முன்பெல்லாம் இந்தப் பிரச்னை 40 – 50 வயதினரையே அதிகம் பாதிக்கும். ஆனால், இப்போது இளம் வயதினரும் மூட்டு வலியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

குறிப்பாக் அதிக உடல் எடை உடையவர்கள், மாடிப்படி அடிக்கடி ஏறி இறங்கும் பழக்கமுடையவர்கள், தரையில் அமர்ந்து எழும் பழக்கமுடையவர்கள், இந்திய முறை கழிப்பிடங்கள் உபயோகிப்பவர்கள், கால்சியம் வைட்டமின் பற்றாக்குறையுள்ளவர்கள், முழங்கால் மூட்டு தேய்மானம் எனும் நோயால் பாதிக்க வாய்ப்புள்ளது. மூட்டில் உள்ள கார்டிலேஜ் என்ற ஜவ்வு பலவீனமாகி பின் நாட்கள் செல்ல செல்ல மூட்டு தேய்மானம் அடைய துவங்குகிறது. தொடக்கத்தில் மூட்டின் முன்புறத்தில் குத்தல் போல் வலி ஏற்படும். பின்னர் வலி சிறிது தூரம் நடக்க துவங்கியவுடன் சரியாகி விடும். இது போலவே அதிக நேரம் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டு பின் எழுந்தவுடன் சிறிது வலி ஏற்பட்டு பின் நடக்க, நடக்க வலி மறைந்து விடும். வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

அத்துடன் இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களையே தாக்கி வந்தது. ஆனால் தற்கால உணவு பழக்க வழக்கங்கள் இளைஞ்ர்களின் உடலில் கூட பலவீனத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் பாஸ்ட் புட் கலாசாரம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெயரில்தான் பாஸ்ட் இருக்கிறதே தவிர, இதை உண்பதால் உடலில் சுறுசுறுப்பு குறைந்து விடுகிறது என்பதுதான் நிஜம். அதுபோல் தற்போதைய வேலை முறைகளும், உடல் உழைப்புக்கு அவசியமே இல்லாத அளவுக்கு உள்ளது.

இன்றைய அவசர யுக மக்களிடம் அதிகாலை எழுதல், உடற்பயிற்சி போன்ற பழக்கங்கள் இல்லவே இல்லை. எளிதான சிறு சிறு உடற்பயிற்சிகள் கூட உடலை வலுப்படுத்தும். இதை யாரும் உணர்வதே இல்லை. இதனால் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு கூட எலும்புகள் பலவீனமாகி மூட்டுதேய்மானம் அடைந்து பாதிக்கப்படுகின்றனர். வளரும் குழந்தைகள் உணவுப்பழக்கம் பற்றி பெற்றோரும் கண்டுகொள்வதில்லை.

இத்தாலிய உணவுகளான பீட்சா, பாஸ்டா போன்றவற்றை பெற்றோரே வாங்கி கொடுக்கின்றனர். இதனால், இயற்கை சார்ந்த உடல் நலத்தை மேம்படுத்தும் உணவு பற்றிய உணர்வே குழந்தைகளிடம் இருப்பதில்லை. மேலும், இவ்வாறு மேலை நாட்டு உணவுகளை சாப்பிடுவது தங்களது அந்தஸ்தை அதிகப்படுத்தும் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளதும் இதற்கு காரணம். படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உடல் நலத்தை பேணுவதற்கும் கொடுக்கப்பட வேண்டும்.

இப்படி பரம்பரைத்தன்மையோ, வேற காரணமோ இல்லாமல் திடீரென்று மூட்டு வலியால பாதிக்கப்பட்டால், முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், அவங்களின் டயட்!

இது குறித்து நம்மிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர் வி.எஸ் நடராஜன்,”மூட்டு வலியால பாதிக்கப்பட்டவங்களை உணவு விஷயம் பற்றி ஆராய்ச்சி செஞ்சப்ப, அவங்கள்ல பலரும் அசைவ உணவுப் பழக்கம் உள்ளவங்களா இருந்தது தெரிய வந்தது. உடனே முதல் கட்டமா, அவங்களை அசைவத்துலேர்ந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறச் சொன்னபோது ஒரு சில நாட்கள்லயே வலி குறையறதை உணர்ந்திருக்காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி அந்த இடத்துல வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது அசைவ உணவு.

அப்படின்னா சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையான்னு கேட்கலாம். அவங்களும் கொழுப்பு குறைவான உணவை எடுத்துக்கிறப்ப வலி குறையறதை உணர்வதா சொல்றாங்க.

சோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக்காளி, பால் மற்றும் பால் பொருட்கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல்கஹால், முட்டை, வேர்க்கடலை, அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி… இதெல்லாம் மூட்டு வலியை அதிகப்படுத்தற உணவுகளாம். மூட்டு வலியோட அறிகுறிகளை உணர்ந்ததுமே, முதல் கட்டமா மேல சொன்ன உணவுகள்ல ஒவ்வொண்ணா நிறுத்திப் பார்க்கலாம். உணவு அலர்ஜியால் உண்டான வலியா இருந்தா, அதை நிறுத்தினதுமே குணம் தெரியும்.

இதய நோய் இருக்கிற சிலருக்கு, மூட்டு வலி இருக்கலாம். அவங்க தினமும் 2 அல்லது 3 பூண்டை பச்சையா சாப்பிடறது இதயம், மூட்டு ரெண்டுக்குமே நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளும் மூட்டுக்கு நல்லது. ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல, அக்ரோட், பாதாம்ல இது நிறைய இருக்கு. தவிர சில வகை மீன்கள்லயும் அதிகமா இருக்கு. வலியோட வீக்கமும் சேர்ந்திருந்தா, தினம் இஞ்சியை ஏதாவது ஒரு வகைல எடுத்துக்கிறதும் குணம் தரும்.”என்றார்.