September 20, 2021

முழு நீள த்ரில்லர் படம் – ‘54231’

மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘54231’ .இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ளார். ‘ரம்மி’, ‘தாண்டவக்கோனே’ படங்களில் நடித்த ஜி.ஆர். அர்வின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி கன்னடவரவு பவித்ரா.
cine may 23 a
‘நெருங்கிவா முத்தமிடாதே’ நாயகன் சபீர் வில்லனாக இருக்கிறார். மேலும் ரோகிணி, ரவிராகவேந்தர், ‘பசங்க’ சிவகுமார், நடித்துள்ளனர்.படக் கதையில் இரண்டு மணி நேரம் நடக்கும் கதையைத் திரையில் இரண்டு மணி நேரம் நடக்கும் காட்சிகளாக உருவாக்கி உள்ளது படத்தின் சிறப்பு.

” படத்தில் 5 பேர் பாத்திரங்கள், 4லைப் ஸ்டைலான விதத்தில் 3 கொலைகளை 2 மணி நேரத்தில் செய்து பழிதீர்த்தல் என்கிற 1ஐ எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள் என்பதே கதை. ” என்கிறார் இயக்குநர் ராகவேந்திர பிரசாத்.
cine may 23
படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவரவுள்ள’ 54321′ படத்துக்கு இப்போதே கவுண்ட் டவுன். ஸ்டார்ட் செய்ய முடிவாம்!