September 23, 2021

முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்!

முருகன்,சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்றும், இந்த வழக்கைப் பொறுத்தவரை விரிவான விசாரணை தேவைப்படுவதால் மூன்றே மாதங்களில் இவ்விசாரனையை முடிக்க வேண்டும் என்றும் இதுபோன்ற வழக்கை இப்படியான பார்வையில் முதல் முறையாக சந்திப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
rajiv murder case. 2
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக கடந்த 18.02.2014ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டது.இதன் அடிப்படையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் ஒரு அறிவிப்பை தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்டார்.தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், கடந்த பிப்ரவரி 20ந் தேதியன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த மனுமீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது. அனைத்துத்தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 27ந் தேதியன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கில் 25ம் தேதிக்குள் தீர்ப்பு வழக்கப்படும் என்று கோவையில் ஒரு பொதுவிழாவில் தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் 25.04.2014 வெள்ளிக்கிழமை, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்றும், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும் இதுபோன்ற வழக்கை முதல் முறையாக சந்திப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
rajiv accused hang
அத்துடன் மேலும், வழக்கில் 7 விதமான விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது என்று கூறியுள்ள நீதிபதிகள், இதுபோன்ற வழக்கை முதல்முறையாக எதிர்கொள்வதாகவும், 3 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க அரசியல் சாசன அமர்வுக்கு உத்தரவிட்டுள்ளனர்.