September 18, 2021

மும்மொழிகளில் தயாராகும் “சீரடி ஜெய் சாய்ராம்” பட ஆல்பம்

தயாரிக்கும் படம் “சீரடி ஜெய் சாய்ராம்” இந்த படம் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.மனிதனாக அவதரித்து மகான் ஆனா சீரடி சாய்பாபாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக்கப் பட்டுள்ளது. இதுவரை பாபாவின் வாழ்கையை பதிவு செய்தவர்கள் சொல்லாமல் விட்ட சில சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீரடி சாய்பாபாவாக தாத்தா ரெட்டி என்பவர் நடிக்கிறார்.மற்றும் ராஜ்குமார்,சத்திவேல், பாலாஜி,நளினிகாந்த்,விஜய்குட்டி,பாவனா,நாராயண்ராவ்,ரேகா லஷ்மிபாய்,லஷ்மாரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.இயக்குனர் இயக்குனர் பாஸ்கர் பாபாவிடம் படம் பற்றி கேட்டபோது,”வாழ்க்கை லட்சியமாக பாபா பற்றிய படம் எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த லட்சியம் நிறைவேறி விட்டது” என்றார் பக்தியுடன்.