October 19, 2021

மும்பை புதிய போலீஸ் கமிஷனர் யார்? ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்!

கிரிக்கெட்டை போலவே தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் சூதாட்டம் நடப்பது வாடிக்கையான விஷ்யம்தான்.அதிலும் இந்த முறை பா.ஜ. காங்கிரஸ் இடையேயான போட்டி பற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதால் சூதாட்டம் இப்போதே களைகட்ட தொடங்கி விட்டதாம். தற்போது நிலையில் இந்த சூதாட்டம் காங்கிரசுக்கு ஆதரவாக இல்லை. பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்குதான் நிலைமை சாதகமாக உள்ளது. சூதாட்டத்தில் அவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை ரூ1.60 நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மோடி பிரதமர் ஆவார் என்று கட்டப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ1.60 கிடைக்கும்.இதற்கு மாறாக ராகுல் காந்தி மீது நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ3தான். . எனினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஏற்படும் அரசியல் மாற்றங்களை பொருத்து இதில் மாற்றம் ஏற்படும்.இந்நிலையில் மும்பை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து, 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடைபெறுவதாக மராட்டிய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
police cap_
மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்த சத்யபால் சிங் சமீபத்தில் தனது பதவியை ராஜினமா செய்து விட்டு பா.ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் போட்டியிடுகிறார்.அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனரை தேர்ந்தெடுக்க மராட்டிய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் புதிய போலீஸ் கமிஷனர் பதவிக்கு 5 உயர் போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் பரீசிலனையில் உள்ளன.முதல் பெயராக கூடுதல் டி.ஜி.பி. ஜாவேத் அக்தர், தீவிரவாத தடுப்புபடை கமிஷனர் ராகேஷ் மரியா, விஜய் காம்ளே, தானே நகர போலீஸ் கமிஷனர் கே.பி. ரகுவன்ஷி, மற்றும் சிறைத்துறை கூடுதல் கமிஷனர் மீரா போர்வன்கர் ஆகியோரது பெயர்கள் பட்டியலில் உள்ளன.

இந்நிலையில் மும்பை போலீஸ் கமிஷனர் பதவி வகிக்க யார் நியமனம் செய்யப்படுவார்கள்? என்பது குறித்து சூதாட்டம் நடைபெறுவதாக மராட்டிய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுவரையிலும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவில் சூதாட்டம் நடைபெற்று உள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பலை பிடிப்பதற்கு போலீஸ் துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது.

இது குறித்து மற்றோரு ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மும்பை போலீஸ் கமிஷனர் பதவிக்கு வருபவருக்கு நாட்டு நடப்பு, அரசியல் விதிமுறைகள், தேர்தல்களை சமாளிக்கும் திறன் இருந்தால் மட்டுமே இந்த பதவியில் நீடிக்க முடியும்.தற்போது சீனியர் அதிகாரி என்ற அடிப்படையில் ராகேஷ் மரியா கடந்த 1993–ம் ஆண்டில் நடந்த மும்பை குண்டு வெடிப்பில் மேற்கொண்ட அவரது அணுகுமுறையும், தீவிரவாத தாக்குதலில் நடத்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் சிறந்தவையாக கருதப்படுகிறது. மேலும் அவருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினரின் முழு ஒத்துழைப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.