September 29, 2021

மும்பையில் மோடியின் மெழுகுச் சிலை!:

மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் நேற்று நடைபெற்ற மகாகர்ஜனா பேரணிக்கு முன்னதாக குஜராத் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் மெழுகுச் சிலையை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.அப்போது ராஜ்நாத் சிங், அந்த மெழுகு சிலையுடன் கை குலுக்க முயற்சிப்பது போல் பாவனை செய்தார்.
wax-statue-of-modi. 22
மும்பையின் பந்த்ரா பகுதியில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பங்கேற்ற “மகா கர்ஜனை” என்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோடியின் பேச்சை கேட்க சுமார் 10 லட்சம் மக்கள் திரண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை மும்பை வந்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், மும்பையில் அமைக்கப்பட்டுள்ள மோடியின் மெழுகுச் சிலையை திறந்து வைத்தார். அந்த சிலையின் பக்கத்தில் நின்று புகைப்பட நிருபர்களுக்கு உற்சாகத்துடன் ‘போஸ்’ கொடுத்த ராஜ்நாத் சிங், சிலையுடன் கை குலுக்க முயற்சிப்பது போல் பாவனை செய்தார்.இதை கண்ட பா.ஜ.க. தொண்டர்கள் கரவொலியுடன் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

Modi’s wax statue unveiled
*********************************************
A wax statue of Chief Minister Narendra Modi was unveiled here ahead of the “Mahagarjana rally” he is addressing in suburban Bandra on Sunday afternoon where 10,000 tea vendors have been specially invited.