September 17, 2021

மும்பையில் கடும் சர்ச்சையை கிளப்பிய 4 நாட்கள் இறைச்சி தடை உத்தரவு!

ஜெயின் மதத்தினரின் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்களுக்கு மும்பையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனெவே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை பிறப்பிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
non veg sep 7
ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் பர்யுசான் என்ற பண்டிகையையொட்டி 10 நாட்கள் விரதம் இருப்பார்கள். இதையொட்டி மிராபயந்தர் பகுதியில் 8 நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து மிராபயந்தர் மாநகராட்சி உத்தரவிட்டது. இந்தநிலையில் மும்பையிலும் இறைச்சிக்கு தடை விதிக்குமாறு பா.ஜனதா கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வரும் 10 13, 17 மற்றும் 18–ந் தேதி ஆகிய 4 நாட்கள் மும்பையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், “தடை விதிக்கப்பட்ட 4 நாட்களுக்கு இறைச்சிக் கடைகள் திறக்கக் கூடாது. எந்த விலங்குகளையும் கொல்லக் கூடாது. விற்பனையும் கூடாது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த உத்தரவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.