September 18, 2021

முப்பரிமாண வடிவம் கொண்ட பொருளை மறைக்க கண்டுபிடிக்கப்பட்ட முதல் மறைப்பான்!

முன்பொரு பிரபு தேவா நடித்த ஒரு படமான முக்காபலா என்ற பாடல் நினைவிருக்கிறதா? அதில் வரும் இன்விசிபிள் கிளாக் எனப்படும் மறைக்கும் ஆடையை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.தற்போது அது போன்ற நிஜமாகவே தீவிர மெல்லிய மறைந்திருக்கும் ஆடையை கண்டு பிடித்து விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
derssless
இதுகுறித்து அமெரிக்க துறை பொருட்கள் விஞ்ஞானங்களும் பிரிவு தலைவர் விஞ்ஞானி ஷியாங் சாங் கூறும் போது, “தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த மறைக்கும் ஆடை 36 சதுர மில்லிமீட்டர் அளவுள்ள பொருளை மட்டுமே மறைக்கும்! இந்த கிளாக் 80 நானோமீட்டர்,தடிமன் கொண்டது. இந்த ஆடை பொருளின் மேற்பரப்பில் விழும் ஒளியை சிதற செய்து ஒளி அலைகள் ஆப்டிகல் மூலம் கன்ணுக்கு தெரியாதவாறு செய்கிறது.

இதைக்கொண்டு நகரும் உயிருள்ளவற்றை மறைக்க பயன்படுத்தினால், அதனை எளிதாக பார்த்துவிட முடியும் என்றார். நுண்ணோக்கி மூலம் உருவாக்கப்பட்ட மெல்லிய தங்க இழையால் ஆன ‘நானோ ஆன்ட்டனா’ சூரியக் கதிரை சோலார் பேனலில் சேமிக்கின்றது. பின்னர் இது ஒளிக்கற்றைகளை சிதறடிப்பதன் மூலம், மனித கண்களுக்கு தென்படாமல் போகிறது.ஆனால் இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு வர ஐந்து முதல் 10 ஆண்டுகள் ஆகலாம். நாங்கள் அடைப்படை ஆடைகளையே வடிவமைத்து உள்ளோம் இன்னும் அதிக பணிகள் உள்ளன.

ஹாரிபாட்டர் அளவுக்கு இல்லையென்றாலும், இதுவே முப்பரிமாண வடிவம் கொண்ட பொருளை மறைக்க கண்டுபிடிக்கப்பட்ட முதல் மறைப்பான் ஆகும்.