September 24, 2021

மினி ஸ்கர்ட்டோடு வரும் பெண்களுக்கு டிஸ்கவுண்ட்! – சீன ஹோட்டல் ஒன்றில் அறிவிப்பு

எவ்வளவுக்கு எவ்வளவு குட்டியூண்டு ஸ்கர்ட் அணிந்து வருகிறார்கள் என்பதை கணக்கிட்டு அதிக தள்ளுபடி வழங்கும் கவர்ச்சிகரமான திட்டத்தை சீன உணவகம் செயல்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
china skirt
முதலில் அந்த குறிப்பிட்ட உணவகத்திற்கு வரும் பெண்களின் ஸ்கர்ட்டை ஊழியர்கள் அளவிடுகிறார்கள். முழங்காலில் இருந்து 12 இன்ச்க்கு மேலாக ஸ்கர்ட் அணிந்திருக்கும் பெண்களுக்கு 90 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுவே 3 இன்ச்சாக இருந்தால் வெறும் 20 சதவீதம்தான் தள்ளுபடி தருகிறார்கள்.

இதுபற்றி கடையின் செய்தி தொடர்பாளர் கூறும்போது ‘‘இளம் பெண்கள் தங்களின் அழகான கால்களை காட்டுவதில் விருப்பம் உள்ளவர்கள். அதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார். கடைக்கு கூட்டம் குவிந்தாலும், சிலர் இது கடையின் மரியாதையை பாதிக்கும் என கூறுகிறார்கள்.