September 20, 2021

மாஸு! – பாஸா? பெயிலா?? மினிப் பார்வை!

சூர்யா, வெங்கட் பிரபு இரண்டு பேருமே பார்ன் இன் சில்வர் ?ஸ்பூன் என்றாலும்இன்றைய வெற்றியை பெற நிரம்ப போராடியவர்கள்… இரண்டு பேரும் இணைந்த மாஸ் திரைப்படம் எப்படி?
mass movie revie
முதலில் மாஸ் படத்தின் கதை ??

மரணத்தின் அருகே சென்று உயிர் பிழைத்தவனுக்கு ஆவிகள் கண்ணுக்கு தெரிகின்றார்கள்… கண்ணுக்கு தெரிந்த ஆவிகள்… அவனிடம் உதவி கேட்கின்றன… அவனும் அவைகளிடம் உதவிகள் கேட்கின்றான்.. என்ன மாதிரியான உதவிகள் என்பது படம் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்…

படத்தின் சுவாரஸ்யங்கள்

அஞ்சான் ராஜூபாயை பயங்கரமாக சமுக வலைதளங்களில் கலாய்த்து வைத்தார்கள்.. அதனால் இந்த படத்தில் கொஞ்சம் கவனத்துடன் அளவோடு ஆடி இருக்கின்றார்கள்… அதே போல ஆவியாக வரும் ஷக்தி கேரக்டர் புலம் பெயர் தமிழன் கேரக்டராக நடித்து இருக்கின்றார்… நன்றாகவும் நடித்து இருக்கின்றார்…

மங்காத்தா இயக்குனர், அஞ்சான் ஹீரோ என்று ஆக்ஷன் பிளாக் எதிர்பார்த்து செல்பவர்களுக்கு பேய் ஜானர் என்பது கொஞ்சம் அதிர்ச்சி… அதே போல அந்த ஜானரில் மூழ்கி நிமிர்ந்து உட்காரும் போதும்.. படத்துக்கு இடைவேளையை விட்டு விடுகின்றார்கள்..
இன்டர்வெல்லுக்கு பிறகு பார்த்தீபன் என்ட்ரியில் இருந்து படம் களைகட்டுகின்றது.. வழக்கம் போல வெங்கட் பிரபுவின் ஆறாவது விரல் பிரேம்ஜி அவருடைய ஆறாவது படத்திலும் நடித்து இருக்கின்றார்….

சமுத்திரகனி வில்லன் பாத்திரம்… உன்னை சரணடைந்தேன்… திரைப்படத்தில் வெங்கட் பிரபுவை வைத்து படம் இயக்கிய போது கூட 10 வருடத்துக்கு பிறகு வெங்கட்பிரபு ஒரு கமர்ஷியல் டைரக்டராக மாறுவார் என்று கனவிலும் நினைத்து பார்த்து இருக்கமாட்டார்…
இரண்டாம் பாதியில் கண்தானம் பற்றி விழிப்புனர்வு கதையோட்டத்தோடு சொல்லியதோடு அதில் ஜெய்யையும் எங்கேயும் எப்போதும் காட்சிகளை இணைத்தது..நைஸ்! .

வெங்கட் பிரபுவின் வழக்கமாக மசாலா பாடல்கள் இந்த படத்தில் இல்லை… பாடல்களும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை… யுவன் என்னாச்சி.. ?? உங்களுக்கு???

வெங்கட்டின் நெருங்கிய சகா… கேமராமேன் ஷக்தி சரவணனை விட்டு விட்டு ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் மாஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார்…இவருக்கும் இது 25 வது படம்… அதே போல எடிட்டர் பிரவினுக்கும் 50 வது படம். இந்த படத்திலும் சென்னை 28 இல் நடித்த முக்கால்வாசி பேர் ஒரு காட்சியிலாவது தலைக்காட்டி விட்டு செல்கின்றார்கள்…

இன்றைக்கும் பலரின் கனவு நாயகி நயன்தாராவை இப்படி வீணடித்து இருக்ககூடாது.. என் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கின்றேன். பிரினிதா பிளாஷ் பேக்கில் வந்து செல்கின்றார்.. மைதா மாவு வெள்ளை.. அவ்வளவுதான்!

பிரமானந்தம் இரண்டுமூன்று காட்சிகளில் வந்து கிச்சி கிச்சி செய்கின்றார்.

நிறைய எடுத்து அதன் பின் அதனை பயன்படுத்தவில்லை என்பது கடைசியல் ஓடும் புளுப்பர் காட்சிகளில் தெரிகின்றது.பைனல் கிக்.

முதல் பாதியில் நிறைய தொய்வு…. இரண்டாம் பாதியில் கொஞ்சூண்டு நிமிர்ந்து உட்கார வைக்க முயல்கிறது… அதனால் இந்த படம் தப்பித்து விட்டது என்று சொல்ல முடியுமா.. என்ன?

நன்றி :ஜாக்கிசேகர்.