October 16, 2021

மார்பகப் புற்றுநோய் பாதிப்பில் பெங்களூருக்கு முதலிடம்!

விஞ்ஞானம் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்ற நிலையிலும் சுவாசப்பை தவிர்ந்த ஏனைய புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான உண்மைக் காரணங்கள் எவை என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களால் திட்டவட்டமாகக் கூற முடியாதிருக்கின்றது.மார்பு மற்றும் கருப்பை வாசல் புற்றுநோய்கள் போன்றவையே பெண்களை அதிகளவில் தாக்குகின்றன.அதிலும் மார்பகப் புற்றுநோயை உரிய காலத்தில் உரிய பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் தடுக்கலாம்.அதிலும் மார்பகத்தின் சுரப்பிச்சோனைகளிலும், பாலகான்களிலும் புற்று அதிகளவில் ஏற்படுகின்றது.
17 - breast cancer
மேலும் பத்தாண்டுகளுக்கு முன், கர்ப்பப்பை புற்றுநோய் அதிகமாக இருந்தது என்றும் இதன் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் கர்ப்பப்பை புற்றுநோயை குறைத்துள்ளது எனவும் ஆனால் தற்போது, இந்தியாவில் மார்பக புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது..

அதிலும் விஞ்ஞான மாற்றங்களுடன் தகவல் தொழில்நுட்பத் துறையின் தென்னகத் தலைநகர் என்று கருதப்படும் பெங்களூரில்தான் தற்போது இந்த நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளதாம்.

இந்தியாவில் மும்பைக்கு அடுத்து பெங்களூரில்தான் கணினி, தகவல் தொழில்நுட்பத் துறைகள் விரைவான வளர்ச்சியை அடைந்துள்ளன. அதேபோல் மக்கள் தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவகத்தின் 2013 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி இந்தியாவிலேயே பெங்களூரில்தான் பெண்களிடம் காணப்படும் மார்பகப் புற்றுநோய் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

அதிகரிக்கும் ஒவ்வொரு லட்சம் மக்கள் தொகைக்கும் 36.6 புதிய மார்பகப் புற்று நோயாளிகள் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக் காரணம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெங்களூருக்கு அடுத்ததாக திருவனந்தபுரம் 35.1 நோயாளியுடன் இரண்டாவது இடத்திலும், சென்னை 32.6 என்ற எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. மொத்தம் 11 நகரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதில் புனே 23.3 என கடைசி இடத்திலும், அதற்கு முன்னதாக கொல்லம் 25.8 என்ற எண்ணிக்கையுடனும் இருப்பதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

காலம் கடந்த திருமணம், குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிக்கும் போக்கு மாறியுள்ளது போன்றவை இந்த நோய்க்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. உடற்பருமனும் இந்த நோய்க்கான ஒரு காரணமாக உள்ளது.

மேலும், உணவுப் பழக்க வழக்கங்கள் மாற்றத்தினால் பெண்கள் சிறிய வயதிலேயே பூப்பெய்துவதும், காலம்கடந்த மாதவிடாய் நிறுத்தமும் இந்த சுழற்சிக்கான காலகட்டத்தையும் அதிகப்படுத்துகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னால் 45-55 வயதில்தான் இந்த நோய்த்தாக்கம் ஏற்படும் என்றிருந்தது மாறி தற்போது 18 வயதிலேயே மார்பகப் புற்று நோயாளிகளைக் காண நேரிடுகின்றது.

இதற்கிடையில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை.

இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. பெரும்பாலும் வலியில்லாமல் காணப்படும் கட்டிகள் தான் இதன் அறிகுறியாக உள்ளது. மற்ற அறிகுறிகள் வருமாறு

1. மார்பகங்கள் அல்லது அக்குளில் புதிய அல்லது வழக்கத்துக்கு மாறான கட்டி, அல்லது தடித்து இருத்தல்

2. மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம்

3. மார்பக தோலில் சிவப்பு தடுப்புகள் போல தொரிவது

4. மார்பு காம்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வடிதல்

5. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது

6. மார்பகங்களில் வலி இது

போன்ற சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.

Breast cancer incidence high among B’lore women:
************************************************************

* Incidence of breast cancer among women in Bangalore is the highest compared to other cities. As many as 36.6 women among every one lakh are diagnosed with breast cancer in the City.*According to the report of the Population Based Cancer Registry (PBCR) from 2009-2011 that was released in New Delhi recently, Bangalore tops…
R