September 26, 2021

மான் கராத்தே – திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் நடிகர்களுக்கு ஏதாவது ஒரு நல்லப்படங்கள் வாய்த்து அதன்மூலம் புகழின் உச்சிக்கு போய்விடுகிறார்கள்… ஆனால் அடுத்து வரும் படங்களில் அந்த புகழை தக்கவைத்துக் கொண்டு வெற்றி நடைப்போட்டவர்கள் ஒரு சிலரே…! ஒருசிலப்படங்கள் இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லவைக்கும் ஆனால் அடுத்து வரும் படங்கள் படுமொக்கைகளாக அமைந்து வந்தவழி தெரியாமல் போய்விடுவார்கள்…ந்த வரிசையில் சிவகார்த்திகேயனை புகழின் உச்சிக்கு அனுப்பிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்.. அந்த படத்தின் புகழ் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் திடீரென புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விநியோகஸ்கர் வரை படுகுஷியில் இருக்கவைத்தது… ஆனால்… தற்போது வந்துள்ள மான் கராத்தே படம்.. அவர் மீது உள்ள எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்ததா என்பது கேள்விகுறிதான்….!
Maan Karate
மிகப்பெரிய கணினி நிறுவனமான சத்யம் கம்யூட்டர்ஸில் வேலை செய்யும் எதிர்நீச்சல் சதீஷ் உள்பட 5 நபர்கள் காடுகளில் சுற்றுலா செல்கிறார்கள்.. அங்கு ஒரு சித்தரை சந்திக்க நேர்கிறது. அவருடைய சக்தியை சோதித்துப்பார்க்க நினைக்கிறார்கள்… யாராவது ஒருவருக்கு மட்டும் ஒரு வரம் தருகிறோன் என்று சித்தர் கூற… இவர்கள் ஐந்துபேரும் தன்னுடைய வரத்தை கேட்க… அதில் சதீஷின் விருப்பமான ஆயுதபூஜைக்கு மறுநாள் தினத்தந்தி ‌செய்திதாள் வரவைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை நிரைவேற்றுகிறார் சித்தர்.

துறவியும் நான்கு மாதங்களுக்குப் பிறகு வரும் அந்த செய்திதாளை தந்துவிட்டு செல்கிறார்… அதில் சில செய்திகளாக… சத்யம் சாப்ட்வேர் கம்பெனி மூடி நான்கு மாதம் ஆகிறது என்ற செய்தி வருகிறது… நம்ம கம்பெனி மூடிவிட்டார்களா..? இதுபொய் என முடிவெடுத்து அடுத்த நாள் அலுவலகம் செல்ல.. ஊழல் பிரச்சனையில் வெங்கடபதிராஜுவை கைது செய்து கம்பெனி மூடப்படுகிறது என்று அதிர்ச்சி தகவல் வருகிறது.

அதன்பின் என்ன செய்வது என்று தெரியாத இவர்கள்… மீண்டும் அந்த செய்திதாளை தேடி… அதில் வேறு என்ன செய்திகள் இருக்கிறது என்று பார்க்கிறார்கள்…

அதில் விளையாட்டுச் செய்திகளில் பீட்டர் என்பவர் குத்துச்சண்டையில் வென்று 2 கோடி ரூபாய் பரிசுபெருகிறார் என்ற செய்தி இருக்கிறது. சரி அவர் யார் என்று கண்டறிந்து இந்த போட்டியின் ஸ்பான்ஸராக நாம் வந்துவிடடு அந்த 2 கோடியை நாம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அந்த பீட்டரை தேடுகிறார்கள்..

அதன்பிறகுதான் தெரிகிறது குத்துச்சண்டை என்றால் என்னவென்று கூட தெரியாத சிவகார்த்திகேயன் தான் பீட்டர் என்பது இவர்களுக்கு அதிர்ச்சியுடன் தெரிய வருகிறது… இதற்கிடையில் சுமாராக இருக்கும் சிவகார்த்தி… ஹன்சிகாவை பார்த்த உடனே காதல் தெற்றிக்கொள்ள அவரிடம் எப்படி காதலை கணிய வைப்பது என்று தெரியாமல் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்…அதே சமயம் சிவகார்த்தியை தேடி பிடிக்கும் அவர்கள்… அவரை எப்படியாவது இந்த போட்டியில் கலந்துக்கொள்ள வைக்க முயச்சிக்கிறார்கள்… ஹன்சிகாவுக்கு விளையாட்டில் மிகுந்த விருப்பம் ஆகையால் நீங்கள் குத்துச்சண்டையில் கலந்துக்கொண்டு ஜெயித்தால் உங்களுக்கு ஹன்சிகா கிடைப்பார் என்று ஆசைவார்த்தைகள் கூறி… குத்துச்சண்டையிட பயிற்சியும் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொடுத்து குத்துச்சண்டையைில் கலந்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

ஹன்சிகாவை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாட்டாக குத்துச்சண்டையில் கலந்துக்கொள்ள முடிவெடுத்து நகைச்சுவையாக அதற்கான வேலையில் இறங்குகிறார் சிவகார்த்தி…. ஆனால் அதற்காக எந்த உத்வேகமும் கொள்ளாமல் விளையாட்டாக இருப்பது அபத்தம்..

அப்படி இப்படியென சிலபோட்டிகளில் தன்னுடைய குரும்புதனத்தால் இறுதிபோட்டிவரை முன்னேறும் சிவகார்த்தி… குத்துச்சண்டையில் மிகபிரபலமாக இருக்கும் கில்லர் பீட்டர் (வம்சிகிருண்னன்) சண்டையில் இறுதிப்போட்டியிக்கு வர அவரிடம்…. குத்துச்சண்டையின் போது குத்துச்சண்டையே தெரியாமல் மான்போல் ஓடி ஒளிந்து காமெடியோடி சண்டையிடும் மான்கராத்தே பீட்டர் (சிவகார்த்தி) எப்படி ஜெயிக்கிறார் என்று கடைசி 10 நிமிட படத்தைமட்டும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கொடுத்து அனுப்பிவைக்கிறார்கள்…

செய்திதாளில் இருப்பது எந்த பீட்டர் என்று குழம்பும் அந்த 5 பேரும் சிவகார்த்திகேயனை போட்டியில் கலக்க வைத்து வெற்றியடையச் செய்தார்களா..? இறுதியில் குத்துச்சண்டைபோட்டியில் வென்றது எந்த பீட்டர்…? தன்னை குத்துச்சண்டைவீரர் என்று பொய் சொன்ன சிவகார்த்தியை ஹன்சிகா கரம்பிடித்தாரா..? என்பதை தான் கொஞ்சம் இழுவையாக இழுத்து முடித்திருக்கிறார்கள்…

சிவகார்த்திகேயனின் நடிப்பு படத்துக்கு படம் மாறுபட்டுவருவது மகிழ்ச்சி… ஆனால் இந்தப்படத்தில் அது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. ஹன்சிகாவை பார்த்து வழிவதும்… அவரை கவர முயற்சித்து பலஇடங்களில் மொக்கை வாங்குவதும்…. குத்துச்சண்டையே தெரியாமல் போட்டியில் கலந்துக்கொள்வதும்.. அதை ஒரு சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் கோச் உள்பட அனைவரையும் கிண்டலடிப்பதும் பார்க்க சகிக்கமுடியவில்லை…

காமெடி நடிகர்களுக்கு அவர்களுக்கு ஏற்றார்போல் கதையையும் திரைக்கதையையும் அமைக்க வேண்டும்.. ஆனால் சீரியஸாக போகவேண்டிய கதைக்கு நகைச்சுவையாக திரைக்கதை எழுதியிருப்பது படுமொக்கையாக இருக்கிறது… எதிர்நீச்சல் படத்தை ஏற்றுக்கொண்ட எனக்கு இந்தப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குத்துச்சண்டையில் காமெடி நடிகர்களுடன் போடும் சண்டை செம ஜாலி… அப்படி இப்படி என பைனலுக்கு சென்றுவிடுவதுதான் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒருசில குத்துச்சண்டைகளுக்கு நடுவராக சூரி வந்திருக்கிறார்… (கௌரவ தோற்றம்)… கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார்…

ஹன்சிகா படம் முழுக்க அம்புட்டு அழகாக காட்டியிருக்கிறார்கள்.. ஆனால் அப்படிப்பட்ட அழகிக்கு 10 திருக்குறள் ஒப்புவித்தால் தன்மகளை திருமணம் செய்துவைக்கிறேன் என்று அவருடைய தந்தை சொல்லி ஆட்களை தேர்வு செய்வது அறுவருப்பு… அதிலும் கலந்துக்கொண்டு திருக்குறள் சொல்லமுடியாமல் திரும்புவது அதைவிட மொக்கை…. அதுவும் சில காமெடி பீஸ்களை வைத்து…

இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். பாடல்கள் சுமார் ரகம்தான் ஆனால் காட்சிகள் அழகாக வந்திருக்கிறது… ஒரு பாடலில் அனிருத் வந்து ஆடுவது பரவாயில்லை என்று பார்க்கவேண்டியதாயிருக்கிறது… ஒருசில பாடல்கள் பரவாயில்லை…

ஏ.ஆர். முருகதாஸ் கதையை… இயக்குனர் திருக்குமரன் சரியாக கையாளவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது…. உதவி இயக்குனர்கள் முதலில் வரும்போது கொஞ்சம் வித்தியாசமாக திரைக்கதைஅமைத்து அனைத்து ரசிகர்களாலும் கவரகூடியராக இருந்தால்தான் அடுத்தடுத்து அவர் ஜொலிக்க முடியும்…ஏற்கனவே பார்த்த காட்சிகள் கேட்ட நகைச்சுவை துணுக்குகள் என்று எந்தபக்கமும் ஒரு வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது. முதல்பாதியும் பிற்பாதியும் விருவிருப்பு இல்லாத காட்சிகளால் எப்போது கிளம்பலாம் என்று என்னவேண்டிய சூழல்…

திருவள்ளூரில் கிருஷ்ணா, லட்சுமி என இரண்டு திரையரங்குகளில் படம் வெளிவந்துள்ளது. நானும் வேடந்தாங்கல் கரணும் லட்சுமியில் படம்பார்த்தோம்… எங்களுடன் மேலும் 30 பேர் படம் பார்த்தனர்…

இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் சறுக்கல்…!

செளந்தர் @ kavithaiveedhi.blogspot.com/