October 24, 2021

மானிய விலையில் 12 சிலிண்டர்கள்! – ரிசர்வ் வங்கி கவர்னர் அப்செட்!

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு தனியார் தொலை காட்சிக்கு பேட்டி அளித்த போது,”மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்துக்கு 12 ஆக உயர்த்தியது தவறான வழிமுறையாகும். வெளியில் விற்க வாய்ப்பு உள்ளது.நமது அரசு நடைமுறையில் இது போன்ற மானியங்களை விரிவுபடுத்துவது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.”என்று தெரிவித்துள்ளார்.
jan 31 -LPG-Gas-Cylinder-Company-
பொதுமக்களுக்கு ஓராண்டுக்கு விநி‌யோகிக்கப்பட்டு வரும் மானிய விலை சமையல் சிலிண்டரின் எண்ணிக்கையை 12-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிலிண்டருக்கு வழங்கப்படும் மானிய தொகையை மத்திய அரசு நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. இதற்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்ற நிலை இருந்தது. இந்நிலையில் ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. மேலும் சுப்ரீம் கோர்ட்டும் ஆதார் கார்ட்டை கட்டாயமாக்ககூடாது என அறிவுறுத்தி இருந்தது. இதுதொடர்பாக வழக்குகளும் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று பேசிய மொய்லி, வங்கிகளில் சிலிண்டருக்கான மானியத்தை பெற ஆதார் அட்டை அவசியமில்லை, தற்காலிகமாக மத்திய அரசு அதை நிறுத்தி வைத்துள்ளது

இந்நிலையில்தான் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு தனியார் தொலை காட்சிக்கு பேட்டி அளித்த போது,”மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்துக்கு 12 ஆக உயர்த்தியது தவறான வழிமுறையாகும். வெளியில் விற்க வாய்ப்பு உள்ளது.நமது அரசு நடைமுறையில் இது போன்ற மானியங்களை விரிவுபடுத்துவது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .ஏனென்றால் நாம் செலவிட வேண்டிய முக்கியமான துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது.மானிய விலை சிலிண்டர்களால் பயன் அடையும் மக்களும் இருக்கிறார்கள். ஆனாலும் சிலிண்டர்களுக்கான சந்தை விலையை கொடுக்க முடிந்த வசதி படைத்தவர்கள் இந்த திட்டத்தால் பயனடைந்து விடுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.