October 16, 2021

மாத விலக்கு ஆன பெண்ணை பலாத்காரம் செய்ய முடியாது என கோர்ட் தீர்ப்பளித்ததா?

மாதவிலக்கு எனப்படும் மெனோபஸ் ஆன பெண்ணை பலாத்காரம் செய்ய இயலாது என்று கூறி பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, டெல்லி ஹைகோர்ட் விடுதலை செய்து தீர்ப்பளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறு என்றும், வேறு பல காரணங்களால்தான் குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
delhi court
2010ஆம் ஆண்டு ஷாரதா(65) என்ற பெண்மணி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் அளித்த தீர்ப்பில், “பிரேத பரிசோதனை அறிக்கையில், ஷாரதாவின் மரணம் இயற்கையாகவே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதில் கொலை செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை. மேலும், ஷாரதாவுடன் உறவு கொண்ட அஜை லால், முரட்டுத்தனமாக உறவு கொண்டுள்ளதற்கான காயங்கள் மட்டுமே இருக்கின்றனவே தவிர, ஷாரதாவின் உடலில் வேறு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது, அவர் உறவுக்கு இணங்கியிருப்பதும், வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதையும் நிரூபிக்கிறது.

மேலும், ஷாரதாவின் உடல்நிலை மற்றும் வயது காரணமாக அவர் முரட்டுத்தனமான உறவின் போது மரணம் அடைந்துள்ளார். இதில், குற்றம்சாட்டப்பட்டவர் கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யும் நோக்கத்தோடும் செயல்படவில்லை.இதனால், குற்றவாளியை பலாத்காரம் செய்த வழக்கிலோ அல்லது கொலைக் குற்ற வழக்கிலோ தண்டிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதாவது, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற 65 வயது பெண்மணி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்பெண்ணை குற்றம்சாட்டப்பட்டவர் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரம் இல்லை என்றும், முரட்டுத்தனமாக உறவு கொண்டிருக்கிறார் என்று மட்டுமே பிரேத பரிசோதனையில் தெரிய வந்திருப்பதை குற்றவாளிக்கு சாதகமாக்கி அவரை விடுதலை செய்வதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பில் எங்குமே மெனோபஸ் ஆன பெண்மணியை பலாத்காரம் செய்ய முடியாது என்று குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.