September 25, 2021

“மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (muscular dystrophy) -குணபடுத்த முடியாத கொடிய நோய்

விஞ்ஞானம் விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து உலகை ஆட்டி படைத்துக்கொண்டிருகிறது. மருத்துவ உலகில் தினமும் பற்பல புதிய கண்டுபிடிப்புகள் எத்தனையோ நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருகிறது .எனினும் மனித குலத்தில் இன்னும் பல கொடிய நோய்களை மனிதன் அறிந்திருக்கவும் இல்லை.நம்மை அது தாக்கும் வரை அதை அறியும் ஆர்வமும் இல்லை அதற்கான போதிய விழிப்புணர்வும் இல்லை.அத்தகையதொரு கொடியநோய்தான் “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” தமிழில் “தசைச்சிதைவு” நோய் என அழைக்கபடுகிறது.
Health congential muscular dystrophy.owl 18
தசைச்சிதைவு நோய் என்பது ஒரு மரபணு நோயாகும் .தசை கட்டுபாட்டிற்கு தேவையான ஒரு புரதத்திற்கு அடிப்படையான ஒரு மரபணு குறைப்பாடே காரணமாகிறது. அடிப்படையான தசை புரத குறைபாட்டால் தசை நார்களின் சக்தி குறைகிறது .மேலும் இவை தசையை இறுகும் தன்மைக்கு கொண்டு செல்கிறது. இறுகிய தசைகளால் மனித எலும்பு மண்டலம் பாதிப்பதோடு மட்டும் அல்லாது மனித உடலின் அடிப்படை கட்டுமானத்தை பாதிக்கிறது .
பொதுவாக மனித உடல் இரு வேறு வகையான தசைகளால் ஆனது

1.தன்னிச்சியாக இயங்கும் தசைகள் (நுரையீரல்,இதயம்)

2.நாம் அசைக்க நினைக்கும் போது அசையும் தசைகள் (கை ,கால்கள் )

தசைசிதைவு நோய் முதலில் நாம் அசைக்க நினைக்கும் போது அசையும் தசைகளையே முதலில் பாதிக்கிறது இதன் விளைவாக நோய் தாக்கப்பட்ட குழந்தை அடிக்கடி கீழே விழுதல்,அமர்ந்த நிலையிலிருந்து எழ சிரமப்படுதல் ,படி ஏற இயலாமை போன்ற அறிகுறிகள் தென்பட்டு நாளடைவில் தன்னிச்சியாக இயங்கும் தசைகளை பாதிக்கும்.
தசைசிதைவு நோய் இந்தியாவில் பிறக்கும் 3,000 குழந்தைகளில் ஒரு குழந்தையை தாக்குவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந நோய் முக்கிய பிரிவில் 9 வகையாக பிரிக்கப்படுகிறது, கருவில் உள்ள குழந்தை முதல் நடுத்தர வயது வரை அனைவரையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது .நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒருவரின் வயது, நோயின் வீரியம்,தசைசிதைவு ஏற்படும் உடல் பாகம் இவற்றின் அடிபடையில் நோயின் தன்மை பிரிக்கப்படுகிறது .இன் நோய் பெரும்பாலும் ஆண்களை மட்டுமே தாக்குகிறது.

பல நாடுகளின் பல வருட உழைப்பில், அதிக பொருள் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் இந்நோயின் மூலக்காரணம் மரபணு என்பது கண்டறியப்பட்டுள்ளது . ஆனால் இந்நோய்க்கான மருந்து இன்று வரை கண்டறியப்படவில்லை என்பதே மிக வேதனை தரும் செய்தி .
தசைசிதைவு நோயைப்பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ள
வேண்டியது மிக அவசியம்.

“குணபடுத்த முடியாத கொடிய நோய் “!

“சக்கரவண்டிதான் இனி வாழ்க்கை.”

“உங்கள் மகன் இனி உங்களுக்கு இல்லை”.

“ஸாரி ஒன்றும் செய்ய இயலாது”. (currently there is no cure for MD
in the world)

>>>நோய் கண்டறிந்தவுடன் மருத்துவர் கூறும் பதில்கள் இவை….
.
ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு குழந்தையை ஈரைந்து மாதம் சுமந்து, வார்த்தைகளால் வரைய முடியாத வலிகளை தான் கடந்து ஈன்றெடுத்து, நோய்,பிணி தொடாமல் கண்மணி மேல் இமை மூடாமல்,வளர்க்கும் அன்னைக்கும் சீராட்டி தோள் சுமக்கும் தந்தைக்கும்,இந்த பதில் அவர்கள் நினைக்கும் எல்லைகளை கடந்த மனஉளச்சலை கொடுக்கும்,
அய்யோ……! அதை எழுதவும் முடியவில்லை …உண்மையில் மருத்துவரிடமும் எந்த மருந்தும் இல்லை என்பதே உண்மை .

இதற்கிடையில் தசைசிதைவு நோயைப்பற்றி புரிதலும்,விழிப்புணர்வும் நம்மிடையே மிக சொற்ப அளவே உள்ளது .மரபணு ஆலோசனை என்றால் எத்துனை பேர் அறிவோம்,இன் நோய் வராமல் தடுக்க மரபணு ஆலோசனை வழி காட்டுகிறது. ஆனால் மரபணு ஆலோசனை மருத்துவர்கள் நம்மிடையே மிக குறைவு, சில குடும்பங்களில் இதை அறியாமல் அடுத்த குழந்தைக்கு முயற்சிப்பதால் ஒரே குடும்பத்தில் இரு குழந்தைகளும் இன் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

தசைசிதைவு நோய் பாதித்த ஒரு குழந்தையின் குடும்பத்தில் அடுத்த குழந்தையும் பாதிகக்கும் ஆபாயம் 50% உள்ளது என்பது பல பெற்றோர்கள் அறிந்திருப்பதும் இல்லை மேலும் இந்நோய் பாதித்த ஓர் ஆண்மகனின் சகோதரிக்கு பாதிக்காத நிலை இருந்தாலும் அந்த சகோதரி வளர்ந்து திருமணமாகி அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு 50% இன் நோயால் பாதிக்க வாய்ப்புள்ளது ஆனாலும் இவைகளை மரபணு ஆலோசனைகளால் தடுத்திட முடியும் .

குழந்தை பாதிக்கப்பட்டு நடை இழந்தாலும்,தன் நிலை மாறினாலும் மீண்டும் நடக்கவும் மற்ற குழந்தைகளிடம் பாகுபாடின்றி பழகவும் முடியும் … வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளி உலகை கண்டு இரசிக்க நாம் வழி வகுக்க வேண்டும் .
Health congential muscular dystrophy.owl 18. 2
இந நிலையை ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்று தர வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை .

இனியும் தாமதம் வேண்டாம் ……!

விரைந்து செயல்படுவோம் ……!

இயலாமையை இல்லாமையாக்குவோம்..!!

மேலும் விவரங்களுக்கு……..

ஜீவன் பவுண்டேசண்,
12/5,சான்டில்யா அப்பாட்மென்ட்,
ஜகதாம்பாள் காலணி ,2ம் தெரு,
ராயபேட்டை ,சென்னை -600014.
தொலைபேசி எண் ; 044 28474400.

திருமதி வசந்தி பாபு +91 9841212442.
Dr.அஜய் +91 9884323123

(தமிழக மக்களுக்கு நடிகராக அறிமுகமாகி மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்ற நெப்போலியன் இது போன்ற உலகின் தசை சிதைவு நோயிற்க்கான தனிப்பட்ட முதல் மருத்துவமனை ஒன்றை நிறுவியுள்ளார்.நான் அறிந்து தனக்கு வந்த துயரத்திற்கு மட்டும் விடை தேடாமல் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் வழிதேடும் மனிதநேயம் படைத்த இவர் விரைவில் உலகின் மிகபெரிய உடல் ஊனமுற்றோருக்கான காப்பகம் மறு வாழ்வு மையத்தின் உருவாக்க பணியில் முனைப்பாக செயல்பட்டு வருகிறாராக்கும் -இப்படிக்கு Dr.அஜய்)

வீடியோ லிங்குகள் ::http://www.youtube.com/watch?v=DitBBXNLY_E&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=vzVPSva0Ta0&feature=youtu.be

 

மேலும் அறிய ::http://www.jeevanfoundation.com/