September 29, 2021

‘மவுத் வாஷ்” அதிகமாக பயன்படுத்துவொருக்கு வாய்புற்றுநோய் வரும்!

மவுத்-வாஷ் போன்ற கிருமிநாசினிகளைத் தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுடன் இத்தகைய கிருமிநாசினிகள் நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடுவதால் ரத்த அழுத்தம் உயர்வதற்கான வாய்ப்புகள் தோன்றுகின்றன என்றும் உயரும் இந்த ரத்த அழுத்தம் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கத்தினையும், இறப்பு விகிதத்தினையும் அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருந்த நிலையில் இத்தகைய மவுத் வாஷ் போன்ற பொருட்களை ஒருநாளில் மூன்று முறைக்கு மேலாக பயன்படுத்தினார்ல் வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்று நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
mouthwash warning 1
காலஸ்கோ டெண்டல் பல்கலைகழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். டேவிட் கான்வே இது பற்றி கூறும் போது, ”பல் துலக்குதலுக்கு பதிலாக மவுத் வாஷ் உள்ளிட்டவற்றை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மோசமான வாய் பராமபரிப்பு மற்றும் தொடர்ச்சியாக மவுத் வாஷ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வாய் கொப்பளித்தல் ஆகியவை கேன்சர் வருவதற்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது மேலும், நான் யாருக்கும் மவுத் வாஷை தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு அறிவுறுத்துவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.காலஸ்கோவ் பல்கலை கழகம் மற்றும் ஐரோப்பிய பல்கலைகழகம் இணைந்து ஒன்பது நாடுகளில் உள்ள 1,962 புற்று நோய் பதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் 1,993 சாதாரண மக்களிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளனர்.