September 26, 2021

மழை வருது.. மழை வருது! குடை கொண்டு போங்.. கோ!

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
weather aug 16
வெப்பசலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக சென்னையில் வெயில் வாட்டி வதைத்தது. நேற்று இரவும் சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெப்பசலனம் நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் இன்று ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.