October 18, 2021

மலாலாவுக்கு மேலும் ஒரு ரஷ்ய விருது!

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், கடந்த 30-ம் தேதி பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருதை வழங்கி கவுரவித்தது.இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கியா பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு அளிக்கப்பட உள்ளது.இது தவிர, ஐரோப்பிய பாராளுமன்றம் வழங்கும் சிறப்பு மிக்க ‘சகாரோவ் மனித உரிமை பரிசு’க்கு தேர்வு செய்யப்பட்ட இறுதிபட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.இதற்கிடையில் நோபல் பரிசுக்கான தேர்வாளர்களின் பெயர்கள் வரும் 11-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசு மலாலாவுக்கே கிடைக்கலாம் என 80 சதவீதம் மக்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 -malala.
பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (16) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது.

இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை 5 ஆபரேஷன்கள் நடந்துள்ளன. மேற்கொண்டு சில ஆபரேஷன்கள் செய்யவேண்டியுள்ளதாகவும் அவற்றை பிறகு செய்து கொள்ளலாம் எனவும் டாக்டர்கள் அறிவுரை வழங்கினர்.

கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்.

உடல்நலம் தேறிய மலாலா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.மேலும் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் சர்தாரி உத்தரவிட்டார். அவர்களின் குடும்பம் லண்டனில் உள்ள ‘வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்’ என்ற இடத்தில் வசித்து வருகிறது. இதற்கிடையில், உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கியா பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு அளிக்கப்பட உள்ளது.அன்னா பொலிட்கோவ்ஸ்கியாவை போல் தீரமாக செயல்பட்டதற்காக மலாலாவுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக தேர்வு கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.வரும் திங்கட்கிழமை நடைபெறும் விழாவில் இந்த விருதை மலாலா பெற்றுக் கொள்கிறார்.

Malala Yousafzai Receives Women’s Human Rights Award
*****************************************************************
Malala Yousafzai has been declared the winner of an award for female defenders of human rights in war and conflict. The 16-year-old from Pakistan was due to accept the 2013 RAW in WAR (Reach All Women in WAR) Anna Politkovskaya Award at a London-based ceremony on Oct. 4.