September 20, 2021

மறைந்த போனது மேகி மட்டுமல்ல ஒரு தலைமுறை ஊட்டச்சத்தும் தான்!

அஞ்சு ரூபா மேட்டர் அதுவும் அமிதாப்பே சொல்லிட்டாருன்னு அப்பீலே இல்லாம மேகியை வாங்கி சோம்பேறி பேச்சலர்ஸும், சோடை போன குடும்ப இஸ்திரிகளும் வாங்கி குவித்த வகையில் மேகி நூடுல்ஸின் கம்பெனியான நெஸ்லே மட்டும் வருடத்துக்கு 5000 கோடிக்கு மேல் வருமானம் பார்த்தது.
ravi maggi
அது மட்டுமில்லாமல் உலக நூடுல்ஸ் வர்த்தகத்தின் 60% சந்தயை கையில் வைத்திருந்த மேகிக்கு மூடு விழா கண்டது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் இந்தியாவுல குடிக்கவோ ’அதைக் கழுவவோ தண்ணீ இல்லை அதை கேட்க வக்கில்லை மேகியை தடை பன்றாங்களான்னு இன்னும் சில புர்ட்சியாளர்கள் பொங்குவது ஏன் என்றத் தான் தெரியலை. இன்னும் சிலரோ போன வாரம் ஸ்விஸ் கம்பெனியான மேகியை பிஜேபி ஆளும் இந்தியாவில் தடை பண்ணின ரகசியம் – கருப்பு பண லிஸ்டை ஸ்விஸ் அரசாங்கம் ரிலீஸ் பண்ணியதால் தான்னு தனக்கு மன்டை ஆப்லங்ககட்டையில் உதித்த ஒன்றை அவர் அவர் வசதிக்கேற்ப்ப வெளியிட்டு தன் சாமர்த்தியத்தை ஓங்கி போஸ்டாக போட்டு கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் சில உண்மையை நாம் பார்ப்போம்…………………..

1872 ஆம் ஆண்டு ஜூலியஸ் மேகி என்பவர் தன் அப்பாவின் ஓடாத மில்லை தன் வசம் எடுத்து சத்தான உணவு வகைகளை தயாரிக்கத்தான் முயற்சி எடுத்த்தார். முதன் முதலாய் சூப் தயாரிக்க ஆரம்பித்த இந்த கம்பெனியின் ஒரிஜினல் மற்றும் இன்று வரை தலைமையிடமாக விளங்கும் இந்த கம்பெனி ஜெர்மனி நாட்டின் கம்பெனி என்று எத்தனை பேருக்கு தெரியும். இந்த கம்பெனி 1897 ஆம் ஆண்டு ஜெர்மனியின் சிங்கன் என்னும் நகரத்தில் உதித்த இந்த கம்பெனியின் பெயர் Maggi GmbH ஆகும்.

இன்றும் பல கூட்டாளிகளை பிரான்ஸ் மட்டும் ஸ்விஸ் நாட்டில் Nestlé S.A என்னும் கம்பெனியாக மற்ற பொருட்களை தயாரிக்க அரம்பித்த இந்த கம்பெனி பங்களாதேஷ் நாட்டுல சக்கை போடும் இந்த நூடுல்ஸை ஏன் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் வங்காளிகளுக்கு, விற்க கூடாது என்று கருதி ஒரு லண்டன் டிவியில் மேகி சாப்பிட்டால் உடல் மஸில் நல்லா வளரும்னு போட்டு விளம்பரம் செய்த வகையில் தான் முதன் முதலில் சர்ச்சையில் சிக்கின ஒன்று இந்தியாவின் உபி மாநிலத்தில் அங்கீகரிக்கபட்ட அளவை விட 17 மடங்கு அதிக ஈயம் இருப்பதை கண்டு இதனை தற்காலிகமாக அந்த மாநிலத்தில் விற்பனையை நிறுத்த பக்கத்து மாநிலமான டெல்லியிலும் இதனை 15 நாள் தடை விதிக்க அதற்க்கு அடுத்து 5 மானிலங்களும் தொடர நம்ம‌ தமிழகத்தில் இதை தடை பண்ணிய உடன் மேகி முழித்து கொண்டு இந்த பொருளை ரீகால் செய்வதாக அறிவித்தாலும் இன்னும் சந்தையில் உள்ள மேகியின் மதிப்பு சுமார் 11,000 கோடி அளவுக்கு இருக்குதாம். ஒரு அறிவிப்பு ஒரு வார்னிங்கும் இல்லாததால் எல்லா கடையிலும் வழக்கம் போல கிடைக்கும் அவலம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதை கண்ட உடன் வழக்கம் போல அரசியலாக்க முயன்ற பலர் வாயைடத்து போன காரணம் உடனே சிங்கப்பூர் அரசாங்கமும் தடை செய்ய பிரிட்டன் அரசாங்கம் திரும்பவும் இவங்க ஃபைலை தூசு தட்டி லேப்புக்கு அனுப்ப கடைசியில் 30% பெரும் சந்தை கொண்ட மலேஷியாவில் மட்டும் தான் மேகி இன்னும் ஒட்டி கொண்டிருக்கிற காரணம் மேகி எல்லா ஹோட்டல்களிலும் ஒரு அத்யாவசிய உணவு பண்டம் என்பதால் தான். இது வரை சுமார் 3 லட்சம் கோடிக்கு மேல் சுருட்டிய மேகிக்கு ஒரு ரூபாய் கூட அபராதம் விதிக்காத ஒன்று பெரும் சாபக்கேடு.

இந்த நிறுவனத்துக்கு மட்டும் சும்மா ஒரு 1 லட்சம் கோடி அபராதம்னு போட்டிருந்தா அத்தனை கம்பெனியும் இந்த ஹார்லிக்ஸ் குடிச்சா ஆஸ்ட்ரானட் ஆகலாம்னு சொல்ற பொய்யை நிறுத்தி கொள்ளும் என்பதில் ஐயமில்லை. மற்ற நூடில்ஸ் கம்பெனியும் இனிமேல் கவனமா இருக்குமா இல்லை வழக்கம் போல கதையான்னு தெரியலை என்றாலும் நாம் ஒரு பொருளை நல்லதில்லை என்று நிராகரித்தாலே எந்த ஒரு கொம்பனும் இந்த சந்தையில் விற்க முடியாது என்பது தான் 100% உண்மை. இந்த மேகி கருமத்துக்கு உப்புமா எம்புட்டோ தேவையில்லைனு நான் பல முன் மன்டை முடிகளை இழந்த பிறகு தெரிந்து அதை நான் உண்ணுவதே இல்லை. உலகத்தையே விழிக்க வைத்த இந்த மேகி தடை இந்தியாவை பல வளர்ந்த நாடுகள் இதை நாம ஏன் முதல்ல செய்யலைனு இப்ப பின் மண்டையை வரட்டு வரட்டுனு சொரிஞ்சிகிட்டு இருக்காங்க…………..

RIP to Maggie is a wise move………….!

Sunday Thathupithu