September 27, 2021

மறுபடியும் வரப் போகுது: மேகி நூடுல்ஸ்!

மேகி நூடுல்ஸ் மீதான தடையை மும்பை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதையடுத்து மீண்டும் இந்த ஆண்டு இறுதி யில் முன்னிலும் உற்சாகமக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அந் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுரேஷ் நாராயணன் இந்த தகவலை கூறினார். இருப்பினும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கான தரச்சான்றிதழ் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கட்டாயம் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வந்து விடும் என்றும் கூறினார்.
maggi aug 23
நீதிமன்ற வழிகாட்டலின் படி மேகி நூடுல்ஸ் மாதிரிகள் நாடு முழுவதும் உள்ள 3 வெவ்வேறு சோதனை கூடங் களில் பரிசோதிக்கப்பட உள்ளதாக சுரேஷ் நாராயணன் தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்திலும், ஐதராபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் உள்ள சோதனை கூடங்களில் தர சோதனை நடைபெற உள்ளதாக கூறினார்.

தற்போது ஏற்பட்ட பிரச்சனைகளால் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் அவற்றில் சேர்க்க்கப்படும் உட்பொருட்களில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 30 வருடங்களாக என்ன செய்தோமோ அதனையே வருங்காலத்தில் செய்ய உள்ளதாக கூறினார். மேகி நூடுல்ஸால் கெடுதல் இல்லையென்றால் அவற்றை உடனடியாக திரும்ப பெற்றது ஏன், அவற்றை அழிக்க காரணம் என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,