September 29, 2021

மரணம் அடைந்தவரின் உடலை எரித்த சாம்பலை விண்ணில் பரப்பும் வணிக நிறுவனம்!

இறந்தவர்களை எரிப்பது, புதைப்பது என்ற இரு நடைமுறைகளே உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ளது. கடல் பயணத்தின் போது இறப்பவர்களின் உடலை கடலிலேயே வீசி ‘கடல் சமாதி’ என்று அறிவிக்கின்றனர். எரிந்த சாம்பலை நதிகளில் வீசுவது, அதை இன்னும் அதிக வெப்பத்தில் கிரிஸ்டல் நிலைக்கு கொண்டு சென்று உருட்டி மாலையாக்கி இறந்தவர்கள் நினைவாக வைத்துக் கொள்வது போன்ற சடங்குகளை சிலர் கடைபிடிக்கின்றனர். ‘இறந்தவர்கள் என்றாவது ஒருநாள் திரும்ப வருவார்கள்’ என்ற நம்பிக்கையில் பெட்டியில் உடலை வைத்து அதை அப்படியே தூக்கி கொண்டு போய், ஆள் நடமாட்டம் இல்லாத மலை உச்சிகளில், இடுக்குகளில், பொந்துகளில் வைக்கும் வழக்கம் சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வருகிறது.மேலும் சீனாவில் இறந்தவர்களின் உடலை அடக்கமோ, எரியூட்டவோ செய்யாமல் அப்படியே உடலை வெட்டி கழுகுகளுக்கு இரையாக்கி இறுதி சடங்கு நடத்துவது நடக்கிறது. இதை ‘ஸ்கை பரியல்’ அதாவது, ஆகாய புதைப்பு என்கிறார்கள். இதனிடையே மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்த சாம்பலை விண்ணில் பரப்ப வணிக ரீதியாக ஒரு நிறுவனம் தொடங்கபட்டு உள்ளது. அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் மாகாணத்தில் உள்ள கெண்டக்கி என்ற நகரில் அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
dead body ash
ராட்சத பலூன் மூலம் விண்ணில் எடுத்து செல்லப்படும் சாம்பல் 75,000 அடி உயரத்திற்கு சென்றவுடன் விண்ணில் பரவும்படி இந்த நிறுவனம் செய்கிறது. ரிமோட் மூலம் பலூனில் உள்ள சாம்பல் விண்ணில் தூவும் ஒரு தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இதற்கென ஒரு குறிப்பிட்ட தொகை வசூல் செய்கிறது. இறந்துபோன உறவினர் இதனால் நேராக சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார்கள் என்பது ஒரு நம்பிக்கை.

இந்த புதிய முறைக்கு அமெரிக்காவில் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. விண்ணில் பரப்பபடும் சாம்பலால் சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்குமா? என்பது குறித்த கேள்விகளும் எழுந்து உள்லன. இந்த சாம்பல் மழை அல்லது பனித்துளிகளுடன் கலந்து மீண்டும் பூமிக்கு திரும்பும்போது கெடுதல் விளைவிக்குமா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.