June 21, 2021

மனித மூளையின் கொள்ளளவு நினைச்சிருந்ததை விட பத்து மடங்கு பெரிசாமில்லே!

நம்மில் பலரும் கேஷூவலாக நாமெல்லாம் ஜஸ்ட் 10 சதவீத மூளையைத் தான் பயன்படுத்துகிறோம். அதையே 80 சதவீதம் பயன்படுத்தினால், விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் போல் இருப்போம் என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஆனால், அந்தத் தகவல் சரியல்ல.உண்மையில் நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளைதான். ருசி, வாசனை, தொடுதலை அறிதல், சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது.
edit brain feb 22 a


மனித மூளை பற்றிய சில தகவல்கள் இதோ…

வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.

ஒவ்வொரு நொடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன.

நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளுமாம்.

மூளையில் 2 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.

வாழ்க்கையில் மூளை, குவாட்ரிலியன்… அதாவது, 10 கோடியே கோடி தகவல் களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது!

18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது.

நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

மனித உடலில் உள்ள ரத்தத்திலும் ஆக்சிஜனிலும் 20 சதவீதத்தை மூளைதான் பயன்படுத்துகிறது.

மனித மூளை மணிக்கு 431 கி.மீ வேகத்தில் செயல்படக் கூடியது.

வலியை அறியும்போது ஆணின் மூளை வேறு மாதிரியும் பெண்ணின் மூளை வேறு மாதிரியும் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பெண்களுக்கான சிறப்பு ஹார்மோனாக அறியப்படும் ஈஸ்ட்ரொஜன் நினைவுத் திறனை வளர்க்கக் கூடியது என்று கண் டறியப்பட்டுள்ளது. அதனால்தான் பெண்கள் அதிக ஞாபகசக்தியோடு இருக்கிறார்கள் போலும்.

மனிதர்கள் எல்லோருக்குமே கனவுகள் வரும். சிலர் அதை மறந்துவிட்டு, கனவு காணுவதில்லை என்று சொல்வதுண்டு. உண்மையில் கனவுதான் மூளையின் உடற்பயிற்சி. நாம் விழிப்புடன் இருப்பதை விட கனவு காணும்போதுதான் மூளை அதிக செயல் திறனுடன் இருக்கிறதாம்.

நாம் சிரிக்கும்போது நம் மூளையின் வெவ்வேறு அய்ந்து பகுதிகளில் பலமான தாக்கம் ஏற்படுகிறது. மூளைக்கு அது கடும் வேலைதான்.

இடது கை பழக்கம் கொண்டவர்களின் மூளையில் கார்பஸ் கொலாசம் என்ற பகுதி வலது கை பழக்கம் கொண்டவர்களை விட 11 சதவீதம் பெரிதாக இருக்கிறது.

சமீபத்திய ஆராய்ச்சிப்படி மூளை கசக்கிப் பிழியப்படும் டாப் 3 டென்ஷன் வேலைகள்…

1. அக்கவுன்டன்ட், 2. நூலகர், 3. டிரக் டிரைவர்

மூளை எடை

பிறந்த குழந்தை 350-400 கிராம்

யானை 4783 கிராம்

பசு 425-458 கிராம்

தங்கமீன் 0.097 கிராம்

பீகிள் நாய் 532 கிராம்

கொரில்லா குரங்கு 465-540 கிராம்.
edit brain feb 22 b 2
இந்நிலையில்தான் முன்பு நினைத்திருந்ததைவிட மனித மூளையின் கொள்ளளவு பத்து மடங்கு பெரியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. நினைவுகள் சேமிப்பதற்கான பொறுப்பு மூளையின் இணைப்புகளுக்கே உள்ளது. இரண்டு நரம்பு செல்களுக்கும் இடையே உள்ள இணைப்பின் (சினாப்ஸிஸ்) சேமிப்பு திறனை அளவிட்டு ஆராய்ந்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

அதாவது சராசரியாக ஒரு சினாப்ஸிஸ், 4.7 பிட்கள் தகவல்களை வைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளை ஒரு பெடாபைட் (petabyte) அல்லது 1,000,000,000,000,000 பைட்டுகள் திறனுடையது என்று அர்த்தம்.

ஒரு பெடாபைட் என்பது சுமார் 20 மில்லியன் நான்கு டிராயரில் ஃபில்லிங் காபினெட்டுகள் முழுவதும் உரையால் நிரப்பப்படுவது போல அல்லது 13.3 ஆண்டுகள் எச்டி-டிவி பதிவுகளுக்கு சமம். இது நியூரோ சயின்ஸ் துறையில் ஒரு உண்மையான அதிர்ச்சி தகவல் ஆகும் என்று சல்க் நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் eLife பேப்பரின் இணை மூத்த எழுத்தாளரான டெர்ரி செஜ்நோவ்ச்கி கூறியுள்ளார்.

மூளைப் பின்மேட்டில் உள்ள நரம்புகளின் செயல்பாடுகள் குறைந்த சக்தியை கொண்டு எப்படி உயர் கணக்கீட்டு ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்ற வடிவமைப்பு கோட்பாட்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். மின்சாரம் மற்றும் இரசாயன நடவடிக்கைகளின் வடிவங்களாக நம்முடைய மூளையில் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் வெளிப்படுகின்றன.

மின் கம்பி போன்று காணப்படும் நரம்பு கிளைகள் சில சந்திப்புக்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு முக்கிய செயல்பாடு நடப்பதை சினாப்ஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நரம்பரிலிருந்து ஒரு வெளியீடு, ‘கம்பி’ (ஒரு நரம்பிழை (axon)) இரண்டாவது நரம்பரிலிருந்து ஒரு உள்ளீடு ‘கம்பி’ -ஐ (ஒரு சிறு நரம்பு இழை (dendrite)) இணைக்கிறது.

சிக்னல்கள் சினாப்ஸிஸ் வழியாக பயணிக்கும்போது ரசாயனங்கள் என்று அழைக்கப்படும் நரம்பியக்கடத்திகள், மற்ற நியூரான்களுக்கு ஒரு எலக்ட்ரிக்கல் சிக்னலை தெரிவிக்க வேண்டும் என்பதை, சிக்னல்களை பெறும் நியூரான்கள் சொல்லும். ஒவ்வொரு நியூரானும் ஆயிரக்கணக்கான மற்ற நியூரான்களை கொண்ட ஆயிரக்கணக்கான சினாப்ஸிஸ்/ஐ கொண்டுள்ளது.

இதனிடையே இந்த நினைவாற்றல் Memory என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஞாபக மறதி ஏற்பட்டால் பல விஷயங்களில் பின் தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு பரிட்சை நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒருகேள்விக்கு பதில் மறந்து போனாலே டென்சன் ஆகிவிடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. எனவே சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

இதன்படி அன்றாடம் வீட்டு சமையலில் சீரகம், மிளகுr ஆகியவை கண்டிப்பாக இடம் பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊற போட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

அக்ரூட், திராட்சை

அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும்ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளைக்கு சுறு சுறுப்பு

நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்Poweder, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில்Essence ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.