April 14, 2021

மனிதர்களை ஏற்றிச் செல்லும் முதல் தனியார் விண்கலம் -சக்சஸ்!

நாசாவும் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து வர்த்தக ரீதியிலான முதல் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி உள்ளது. இதில் நாசாவின் விண்வெளி வீரர்கள் 3 பேர், ஒரு ஜப்பான் விண்வெளி வீரர் என 4 பேர் பயணம் மேற் கொண்டுள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் பெயர் டிராகன். புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னட விண்வெளி மையத்தில் உள்ள கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நாசாவின் அங்கீகாரத்துடன் விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் முதல் தனியார் விண்கலம் இது ஆகும். இந்த விண்கலத்தில் சென்றுள்ள விண்வெளி வீரர்கள் 6 மாதம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக பிரிந்து பயணிக்கத் தொடங்கியதும், ராக்கெட் பூஸ்டர் பூமிக்குத் திரும்பி, கடலில் ஒரு கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.