September 18, 2021

மதுவை பயன்படுத்தி எஸ்எம்எஸ் அனுப்பலாமாக்கும்! வீடியோ!

செல்போன் டவர், சிக்னல் இல்லாமல் மதுவை பயன்படுத்தி எஸ்எம்எஸ் அனுப்பும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
Tec sms alchocal
உலகம் முழுவதும் விரைந்து செய்தி அனுப்ப முன்பு மோர்ஸ் என்பவரின் தந்தி (டெலிகிராம்) பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.இப்போது சாதாரண போன், பேஜர், செல்போன் என அடுத்த கட்டத்துக்கு தொழில்நுட்ப வளர்ச்சி சென்றது. இதன் மூலம் எஸ்எம்எஸ் செய்திகள் எம்எம்எஸ் எனப்படும் படங்கள் அனுப்பப்படுகின்றன.

ஆனால், செய்திகள், படங்களை அனுப்ப செல்போன் டவர் சிக்னல் இருப்பது அவசியம். சிக்னல் கிடைக்காத மலை பிரதேசங்கள், கடல் வழிகள், ஆழமான சுரங்கங்கள் ஆகியவற்றில் செய்திகளை அனுப்ப முடியவில்லை.இந்த பிரச்னைக்கு நியூயார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீர்வு கண்டுள்ளனர். ரசாயன முறையில் எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்ப முடியும் என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் ஆண்ட்ரூ கூறுகையில், வோட்கா மதுவை பயன்படுத்தி அதன் ஆவியில் ஏற்படும் ஆல்ஹகால் மூலக்கூறுகளில் ‘ஹாய் கனடா’ என்ற எஸ்எம்எஸ் செய்தியை முதல் முறையாக அனுப்பி சோதனை செய்தோம். சுமார் 10 மீட்டர் தொலைவில் ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்த ரிசீவர் மூலமாக அந்த மூலக்கூறை பிரித்து செய்தியை பெற்றுள்ளோம்.

இது வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றால் ஆழமான சுரங்கங்களில் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் போது செல்போன் டவர் இல்லாமலேயே செய்திகளை அனுப்பி பெற முடியும் என்று தெரிவித்தார்.

வீடியோ பார்க்க லிங்க்:https://www.youtube.com/watch?v=39oEgkIThHU

New Technique to Send SMS by Using Alcohol in Vodka
****************************************************************
Researchers at York University have incredibly sent the world’s first SMS using evaporated vodka. The text said, ‘O Canada’. Researchers are excited over the feat they have achieved and why they should not be?