September 18, 2021

மண்டை ஓடு, மூளையின் பெரும் பகுதியை இல்லாமல் பிறந்த குழந்தை ஃப்ர்ஸ்ட் பர்த் டே!

அமெரிக்காவில் இருக்கற புளோரிடா ஸ்டேட்டிலுள்ள டேவ்ரஸ் நகரில் ஒரு ஸ்மால் பேங்கில் ஆபீசரா ஒர்க் பண்ணி வருபவர், பிராண்டன் புவெல்(30). இவரோட ஒய்ப் பிரிட்டனி,(27) முதல் முறையாக கருவுற்ற போது, வயிற்றில் வளரும் குழந்தையோட நிலையை அறிந்து கொள்ள ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள் ஷாக் ஆயிட்டாங்க. காரணம் -மண்டை ஓடு மற்றும் மூளை யின் பெரும் பகுதி வளர்ச்சியே அடையாம அந்த 17 வார ஆண் கரு இருந்தது.
baby headless
’மைக்ரோஹைட்ரானெஸ்பாலி’-ன்னு சொல்லப் படற இவ்வகை குறைபாட்டுடன் அமெரிக்கா வில் சுமார் 5 ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பதுண்டு. ஆனால், பிறந்த பின்னர் அக்குழந்தை உடனடியாக இறந்து விடுவது மிகவும் சகஜமான ஒன்றாக இருந்து வருகின்றது. அதுனாலே, இந்த குறைபாட்டை சுட்டிக் காட்டிய டாக்டர்கள் உடனடியாக அபார்ஷன் செய்து கொள்ளும்படி பிரிட்டனிக்கு ஆலோசனை வழங்கினர்.

ஆனால், கடவுள் கொடுத்த கருவை சிதைக்கவும், அழிக்கவும் நாம் யார்? என்று தீர்மானித்த பிராண்டன் புவெல் – பிரிட்டனி தம்பதியர் அந்த குழந்தையை முழுமை யாக பெற்றெடுக்க விரும் பினர். இதையடுத்து. 27-9-2014 அன்று சிசேரியன் மூலம் பிறந்த அந்த குழந்தைக்கு ஜாக்சன் புவெல் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

ஒரு வழியாய் பூமிக்கு வந்த அந்த குழந்தையின் உயிர் எப்போது பறிபோகும்? என்பது தீர்மான மாக தெரியாத நிலையில் ஜாக்சனின் பெயரால் ‘பேஸ்புக்’கில் ஒரு பக்கத்தை துவங்கி, அவனது சிகிச்சைக்காக நிதி திரட்ட ஆரம்பித்தனர். அந்த பக்கத்துக்கு 90 ஆயிரம் ’லைக்’குகள் கிடைத்தன. ‘ஜேக்ஸ் ஸ்டிராங்’ என அபிமானி களால் அழைக்கப்பட்ட அவனது சோகக் கதை யை சுமார் 18 ஆயிரம் பேர் ‘ஷேர்’ செய்திருந்தனர். இவர்களில் 1,841 கொடையாளர்கள் ஜாக்சனின் சிகிச்சை செலவுக்கு 54 ஆயிரம் டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளனர்.

இன்றைய நாளில் நமது முகத்தை பார்த்து ஸ்மைல் பண்ணும் தங்களது அன்பு மகன் நாளை உயிருடன் இருப்பானா? மாட்டானா? என்ற கவலையுடன் இந்த தம்பதியர் நாட்களை நகர்த்தி வரும் நிலையில், நாட்கள் கடந்து, மாதங்களாகவும், பின்னர் ஒரு ஆண்டாகவும் மாறி விட்ட நிலையில் ஜாக்சன் புவெல் இன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடுகிறான். இதை அக்குழந்தையின் பேஸ்புக் அபிமானி களும் ஹேப்பியாக செலபிரேட் பண்ணி வராங்க.