September 18, 2021

மணிப்பூர் சி. எம்-மை எதிர்த்து போட்டியிடுகிறார் ஐரோம் ஷர்மிளா

மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஐரோம் ஷர்மிளா  2000-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அசாம் ரைபிள்ஸ் படையினரால் 200-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தனது 27-வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 16 ஆண்டுகளாக பட்டினி கிடந்து போராடினார். எனினும் அவருக்கு கடைசி வரை  வெற்றி கிடைக்கவில்லை. எனவே, அந்த சட்டத்தை நீக்கும் திட்டத்தில்  அரசியலில் குதித்தார்.
manipur feb 6
இதன்படி அங்கு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மணிப்பூர் முதல் மந்திரி இபோபி சிங்கை எதிர்த்து ஐரோம் ஷர்மிளா போட்டியிட முடிவு செய்துள்ளார். சர்மிளா போட்டியிட முடிவு செய்துள்ள தவுபால் தொகுதியில் முதல் மந்திரி இபோபி சிங்குக்கே அதிக செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இரோம் ஷர்மிளாவை ஆதரித்து அவரது கட்சித் தொண்டர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர குராய் தொகுதியிலும் சர்மிளா போட்டியிடுகிறார். மணிப்பூரை பொறுத்தவரை, இபோபி சிங் தலைமையில் 3 சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியள்ளது.