October 21, 2021

மகாராஷ்ட்ராவில் கூட்டணி: அரியானாவில் தனித்து ஆட்சி! பா.ஜ. க அசத்தல்

பாஜ. அரியானாவில் 90 தொகுதிகளுக்கு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது.மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உயர்ந்து அந்த மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. 25 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த சிவசேனா ஆதரவு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், எதிர் தரப்பில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து தருவதாக அறிவித்துள்ளது.இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, 10 ஆண்டுகளாக அரியானாவில் இருந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
bjp oct 20
மக்களவை தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில மாநில சட்டப் பேரவை இடைத் தேர்தலில் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா, அரியானாவுக்கான சட்டப் பேரவை தேர்தல் கடந்த 15ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மகாராஷ்டிராவில் 27 பிரசார கூட்டங்களிலும், அரியானாவில்11 பிரசார கூட்டங்களிலும் பங்கேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மகாராஷ்டிராவில் சிவசேனா உடனான கூட்டணி முறிந்ததால், இரு மாநிலத்திலும் தனித்தே போட்டியிட்டது பாஜ. இரு மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், தேர்தல் முடிவை அறிந்து கொள்ள நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.2 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தொடக்கம் முதலே பாஜ இரு மாநிலங்களிலும¢ முன்னிலை பெற்று வந்தது.அரியானாவில்: அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜ 47 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது