September 29, 2021

மகளை நிர்வாண ஓவியம் வரைந்த தந்தை! – சீன சர்ச்சை

சீனாவில் Oriental Goddess and Mountain spirit என்ற டைட்டிலில் பெயிண்டிங் கலெக்ஷன் செய்வதற்காக ஒரு ஓவியர் தனது 23 வயது மகளையே நியூட் மாடலாக வைத்து நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்திருப்பது நாடு முழுவதும் சர்ச்சை கிளவ்வி வருகிறது. மேலும் அவர் வரைந்த அவரது மகளின் ஓவியங்கள் பேஸ்புக்கிலும் வேகமாக காட்டுத்தீ போல பரவி வருகிறது.
china nude art
சீனாவை சேர்ந்தவர் லீ ஜூவாங்பிங். ஓவியரான இவர் ஆயில் பெயிண்டிங்கில் மிக பிரபலமானவர். அவரது மகள் லீ குவின் (23). பெண் கடவுளின் மாதிரி வடிவமாக தன் மகளை பாவித்து நிர்வாணமாக ஓவியம் வரைவதென்று முடிவு செய்தார் ஜூவாங்பிங். பின் தனது மனைவி மற்றும் மகளிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே மகள் லீ குவினை ஆடையின்றி புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு அருகிலும், கழுகின் அருகிலும் நிற்க வைத்து அதை அப்படியே ஓவியமாக வரைந்துள்ளார். இதற்கு உலகெங்கிலுமுள்ள ஓவியக் கலைஞர்களிடமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

முதலில் இந்த சர்ச்சை அங்குள்ள உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் வெளியான கட்டுரை மூலம் பரவியிருக்கிறது. 23 வயதுள்ள மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்திருப்பது சமூகத்தின் பாலியல் அறநெறிக்கு முரண்பாடானது, அது தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என அந்நாட்டில் உள்ள பல்வேறு இளையோர் அமைப்புகளும் எச்சரித்துள்ளன.

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவு புனிதமானது. அதை பரிசோதித்து பார்க்கும் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கதக்கது என இண்டர்நெட்டிலும் பல ஆயிரக்கணக்கான கலைஞர்கள், எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அந்த ஓவியத்தை வரைந்த லீ கூறுகையில், ‘என் குடும்பத்தில் யாரும் இப்படி குழப்பமடையவில்லை. உண்மையில், என் மகளை குழந்தை பருவத்தில் குளிப்பாட்டியதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.’ என்று தெரிவித்தார். அவரது மகளும் அவரது தந்தைக்கு ஆதரவாக, ‘நானும் ஒரு ஓவியக் கலைஞிதான். எனது தந்தை ஓவியம் வரைவதற்காக மாடலாக நிற்பது புனிதமான ஒன்று. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் நாங்கள் பெருந்தன்மை மிக்கவர்கள்’ என்றார்.

லீக்கு இண்டர்நெட்டில் எதிர்ப்புகள் குவிந்து வரும் வேளையிலும் சில கலைஞர்கள் அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். உதாரணமாக, சின்சுவான் பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணியாற்றி வரும் லின் மு என்ற ஓவியக்கலைஞர் கூறுகையில், ‘சில ஓவியர்கள் தங்கள் மனைவியை நிர்வாணமாக மாடலாக வைத்து படம் வரைவார்கள். ஆனால், மகளையே நிர்வாண மாடலாக வைத்து படம் வரைவது அபூர்வமானது. அறநெறி மற்றும் ஒழுக்கத்துடன் போராடி அந்த ஓவியத்தை வரைந்திருப்பது மதிக்கத்தக்கது.’ என்று கூறினார்.

இந்த தகவலை oilpaintingcentre.com வெப்சைட்டில் படத்தை வரைந்த லீ-யே தெளிவாக கூறியிருக்கிறார். லீயின் பேஸ்புக் பக்கத்திலும் அவர் வரைந்த மகளின் அனைத்து நிர்வாண ஓவியத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார்.