June 25, 2021

ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் ! – இதுவரை தயாரிக்கப்படவோ, அசெம்பிள் செய்யப்படவோ இல்லை!!

Freedom 251 என்ற பெயரில் அறிவி‌க்கப்பட்டுள்ள உலகின் மிகக் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க முதல் இரண்டு நாள்க‌ளில் 5 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 25 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக விரைவில் வழங்கப்படும் என்று நொய்டாவைச் சேர்ந்த Ringing Bells நிறுவ னம் தெரிவித்துள்ளது. ரிங்கிங் பெல் நிறுவனத்தை உருவாக்கியவர், மோகித் குமார் கோயல். இவரோட அப்பா ராஜேஷ் கோயல், உ, பி. ஷாம்லி மாவட்டம் கர்கிபுக்தாவில், தக்கனூண்டு மளிகைக் கடையை நடத்தி வருகிறார். டெல்லியில் உள்ள அமிட்டி பல்கலையில் பொறியியல் பட்டம் படிக்கும் வரை, ஊரில், தன் அப்பாவுக்கு உதவியாக மளிகைக் கடையில் வேலைபார்த்தார் மோகித் குமார்.
edit feb 21


இப்போ அவர் துவங்கியுள்ள நிறுவனத்தில் மோகித் குமார் தவிர, அவரது தந்தை ராஜேஷ் குமார் கோயல், தாயார் சுஷ்மா தேவி ஆகியோரும் இயக்குனர்களாக உள்ளனர். அவரது ஒய்ப் தார்னா, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளனர்; இவர்களுக்கு, ரீசண்டாதான் திருமணம் நடந்தது. ‘பிரீடம் 251’ மொபைல் அறிமுக விழாவில் கூட, மோகித் தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ளவில்லை. பல்வேறு துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் உள்ள, நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா தான், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.ஒரு சாதாரண நகரில், மளிகைக் கடை நடத்தி வருபவரின் மகனான மோகித், தன் திடீர் அறிவிப்பால், தற்போது உலகெங்கும் பிரபலமாகி விட்டார்.

ஆக இப்போதைய ஹாட் டாப்பிக்கான ரூ.251–க்கு ஸ்மார்ட் செல்போன் வழங்க முடியுமா? இது ஏமாற்று செயல். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மொபைல் போன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இதையடுத்து மத்திய தொலைத் தொடர்புத்துறை மினிஸ்டர் ரவிசங்கர் பிரசாத், ‘‘ரூ.251–க்கு மொபைல் போன் எப்படி கொடுக்க முடியும். இவ்வளவு குறைந்த விலையில் உற்பத்தி செய்வது சாத்தியமா? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மின்னணு உற்பத்தி துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இதனிடையே லாவா மொபைல் நிறுவனத்தின் இணை நிறுவனர் எஸ்.என் ராய் பிஸினஸ் லைன் இதழுக்கு அளித்த பேட்டியில், “நிதர்சனத்தில் இது சாத்தியமில்லை. ஏனெனில், மெமரி கார்டு, சிப்செட் அல்லது பிராசஸர் ஒன்றின் விலைகூட இந்த ஒட்டுமொத்த மொபைலை விட விலை அதிகம். இதனை நிஜமான வர்த்தக உத்தியாக நான் கருதவில்லை. வாங்குவதற்காக முன்பதிவு செய்தவர்களின் பணத்துக்கான உத்தரவாதம் குறித்தும் நான் கவலை கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கிரேஹவுண்ட் ரிசர்ச் நிறுவனத் தின் தலைமை பகுப்பாளர் சஞ்சித் வீர் கோகியா கூறும்போது, “இதன் பின்னணி யில் மறைமுகமான மானியம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இது சாத்தியமேயில்லை. குறைந்தது 2 நியதி களின் அடிப்படையில் ஸ்மார்ட் போன் விற்பனை இருக்க வேண்டும்.ஒன்று விலை, மற்றொன்று அனுபவம். இந்த தயாரிப்பில் இவற்றை நான் காணமுடியவில்லை. மேலும், கிரெடிட் கார்டு இல்லாத வாடிக்கையாளர்கள் குறி வைக்கப் பட்டிருக்கிறார்கள். மேலும், இந்நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு தொழில்நுட்பபின்னணி ஏதும் கிடையாது. மேக் இன் இந்தியா அப்ளிகேஷன் இந்த மொபைலில் இணைக்கப்படுவது, சில முன்னேற்பாடுகள் (அரசாங்கத்துடன்) இருப்பதைக் காட்டுகிறது ” என்றார்.

அதே சமயம் இது குறித்து ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா கூறும் போது, ‘‘இந்த மொபைல் போன் தயாரிப்புக்கு ரூ.2500 செலவாகிறது. ஆனால், விற்பனையில் புதுமை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரிச்சலுகை போன்ற பல்வேறு காரணங்களால் இந்த போனை ரூ.251–க்கு விற்பனை செய்கிறோம். மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் போது ஒரு மொபைலுக்கு ரூ.530 வரை மிச்சப்படுத்தலாம். நேரடி விற்பனை இல்லாமல் ஆன்லைன் மூலம் விற்பதால் ரூ.460 வரை மிச்சமாகும்.

பல்வேறு வகையில் சேமிக்கப்படும் தொகையை வாடிக்கையாளர்களுக்கே தருகிறோம். வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைக்கு பின் ரூ.800–க்கு இந்த போனை விற்க வேண்டும். ஆனால், 251–க்கு விற்கிறோம். சந்தையில் மிகப்பெரிய இடத்தை பிடிக்கும் போது பல்வேறு பொருட்களை நாங்கள் விற்க முடியும். அந்த வகையில் இந்த இழப்பை ஈடுகட்ட முடியும். நாங்கள் மிகப்பெரிய லாபத்தை எதிர்பார்க்கவில்லை”அப்படீன்னு சொல்லியிருக்கார்⁉

அவர் மேலும் கூறும்போது, “வருமான வரித் துறை இந்த நிறுவனத்தைக் கண்காணிப்பதாக தகவல் வந்துள்ளது என்று கேட்கிறார்கள் . ஆம், சுங்கவரித்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சென்றனர். எங்கள் இலக்கை மேக் இன் இண்டியா, ஸ்கில் இண்டியா, ஸ்டார்ட் அப் இண்டியா திட்டங்களின் மூலம் சாதிக்க நினைக் கிறோம். அவர்கள் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளனர். எதிர்காலத்தில் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவதாக தெரிவித்துள்ளனர்” என்றார்.

பல தரப்பிலும் சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் ஒருசேர எழுப்பியுள்ள இந்த மலிவு விலை மொபைல் போன் இதுவரை தயாரிக்கப் படவோ, அசெம்பிள் செய்யப்படவோ இல்லை. முன்பதிவுக்காக அனுப்பப்பட்ட தொகை இன்னும் என் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனினும், மொபைல்களை விநியோகிக்கத் தொடங் கும்வரை அத்தொகை தனக்குத் தேவைப் படாது என மோஹித் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “இரண்டு நாட் களில் என் வர்த்தக திட்டத்தை அறிவிப் பேன். 25 லட்சம் மொபைல் போன் முன்பதிவு என்ற இலக்கை எட்டிவிட்டோம். ஏப்ரல் இறுதியிலிருந்து மொபைல் போன் விநியோகத்தைத் தொடங்கி விடுவோம். நொய்டாவில் ஒன்றும், உத்தராகண்டில் ஒன்றுமாக இரண்டு தொழிற்சாலைகளை நிறுவவுள்ளோம்’’ என்றார்.