October 24, 2021

”போடுறா வெடியை மாப்ளை..”ன்னு – மோடி தீபாவளி கொண்டாடிய இடம் எது தெரியுமா?

உலகத்தின் உயரமான சண்டைக்களமான சியாச்சன் பகுதியில் பிரதமர் மோடி தீபாவளியை இந்திய நாட்டு ராணுவ வீரர் ravi - modi 1களுடன் கொன்டாடினார் அது மட்டுமல்ல அப்போது அங்கு அவர் நிகழ்த்திய சிறிய பேச்சு அதாவது“தேசம் அமைதியாகத் தூங்குகிறது; காரணம் நீங்கள் விழித்திருப்பதால்!” என்று கூறியது இந்திய வீரர்களுக்கு பயங்கர டானிக் வகையில் இருந்ததாம்

மேலும் இதுப் பற்றி”நமது தாய்நாட்டைக் காப்பதற்காக, பல்வேறு சவால்களை எதிர்த்துப் போராடுகிறார்கள் நமது வீரர்கள். சியாச்சினில் நிலவும் சூழல் குறித்து நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். கடுமையான குளிரா, அதிக உயரமா? இவை குறித்து அவர்கள் அஞ்சுவதில்லை. அவர்கள் இங்கே நம் நாட்டுக்காக நிற்கிறார்கள். உண்மையிலேயே நமக்குப் பெருமிதத்தை சேர்க்கிறார்கள்…” என்று மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹும்..பெரும்பாலும் பண்டிகைன்னா தொழில் அதிபர்கள் கூட கையை குலுக்கி ஏசி ரூமில் டின்னர் சாப்பிடும் பிரதமர்களை கம்பேர் செய்தால் இது பெரிய விஷயம். அது மட்டுமல்ல ஜம்மு ஸ்ரீநகர் போனார் ஏன்னா எலக்க்ஷன் வருதுன்னு நக்கலடிச்சவங்களுக்கு சியாச்சன் பகுதியில் மூச்சு விட காத்து கூட குறைவாதான் வரும்…….கண்டிப்பா அக்ஸிஜன் சப்போர்ட் தேவைன்னு உணர்வார்களா?

இன்னும் விளக்கமா சொல்லப் போனால் இந்திய–பாகிஸ்தான் எல்லையில் இமயமலையில் உள்ளதுதான் சியாச்சின் பனி சூழ்ந்த பகுதி ஆகும்.இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள போர்க் களம் என்று சொல்கிறார்கள். குளிர்காலத்தில் சில சமயங்களில் இங்கு மைனஸ் 50 டிகிரி குளிர் நிலவும். இந்த பகுதியில் இரு நாடுகளின் படைகளும் உள்ளன. அதனால் அந்த பகுதியின் பாதுகாப்புக்காக இரு நாடுகளுமே அதிக அளவில் பணம் செலவிட வேண்டி உள்ளது.
ravi - modi 2
அந்த ரிஸ்கான இடத்துக்கு போன பி எம்-முக்கு என்னா ஒரு அதிசயம் வெடி வெடித்து வரவேற்ப் கொடுத்தது! பாகிஸ்தான் தரப்பு சைட்ல – குறுக்கே பூனை போனாலே செக்யூரிட்டி ரீஸனால் பிரதமர் நிகழ்ச்சி ரத்துனு சொல்ற ஒரு நாட்டுல போடுறா வெடியை வந்துட்டே இருக்கேன்டா மாப்ளைன்னு போனது மோடி மட்டும்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் – ஜெய் ஹிந்த்