September 25, 2021

பொருத்தமான மணமகளுக்காக வெயிட்டிங்! – ராகுல் தகவல்!

“எனக்கு பொருத்தமான மணமகள் கிடைத்ததும் உடனே திருமணம் செய்து கொள்வேன். தற்போது நான் மக்களவைத் தேர்தலில் பிசியாக உள்ளேன். அதனால் இப்போது எனது சொந்த வாழ்க்கை பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை மேலும், ஒரு ஆண்டா, இரண்டு ஆண்டுகளா என்பது விஷயமில்லை. எனக்கு பொருத்தமான மணமகளை நான் தேர்ந்தெடுத்ததும் உடனே திருமணம் தான்” என்று ராகுல் தகவல் தெரிவித்துள்ளார்.
rahul_gandhi_
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல், எனக்கு பொருத்தமான பெண் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த கேள்வி எனது எல்லா பேட்டிகளின் போதும் கேட்கப்படுகிறது; என்று கூறியுள்ளார்.

பல்வேறு கேள்விகளுக்கிடையே திருமணம் குறித்து கேள்வி எழுப்பியபோது பதில் அளித்த ராகுல்; இந்த திருமணம் குறித்து எப்போதுமே கேள்வி எழும்பும். ஆனால் நான் தற்போது தேர்தலில் பிசியாக உள்ளேன். துரதிஷ்டவசமாக எனக்கு சொந்த வாழ்க்கை பற்றி சிந்திக்க நேரம் இல்லை. இது இரண்டு ஆண்டா, ஒரு ஆண்டா என்பது முக்கியம் இல்லை. எனக்கு பொருத்தமான மணமகளை நான் கண்டுபிடித்ததும் உடனே திருமணம் தான் என்று தற்போது 43 வயதான ராகுல் காந்தி கூறியுள்ளார். உடனே மணமகளை இன்னும் தேர்வு செய்யவில்லையா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது; மணமகள் கிடைத்ததும் உடனே திருமணம் என்ற பதிலை மீண்டும் கூறினார்.

Will Marry When I Find the Right Girl: Rahul Gandhi