October 22, 2021

பொங்கல் ரிலீஸ்! – எது? எப்படி? ஏன்?

கெத்து ... கதகளிதார தப்பட்ட …. ரஜினி முருகன் … 4 திரைப்படங்களும் திரைக்கு 14ம் தேதி வருவது உறுதியாகி விட்டது.இந்த திரைப்படங்களுக்கும் உள்ள ஒற்றுமை நான்கு திரைப்படங்களுமே அந்தந்த கதாநாயகனுக்கு முக்கியமான படங்கள் ..நான்கு திரைப் படங்களுமே அதிக பொருட்செலவில் எடுக்கப் பட்ட படங்கள் .நான்கு நாட்கள் தமிழக மெங்கும் உள்ள திரையரங்குகள் திருவிழா போல வசூல் அள்ளும் ..
pongal cine jan 11
நான்கு திரைப்படங்களில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ள படம் ரஜினி முருகன் ..

எம் ஜி ஆர் சிவாஜி …… கமல் ரஜினி …. ராமராஜன் ராஜ்கிரண் … என்பது போல அதற்குப் பின் விஜய் அஜீத் சூர்யா விக்ரம் ….. தனுஷ் சிம்பு ஜெயம் ரவி ஜீவா ஆர்யா விஷால் கார்த்தி …. ( பாக்கியராஜ் பார்த்திபன் டி ராஜேந்தர் .. இந்த மூவரும் தனி வரிசை .. இயக்குனர் மற்றும் நடிகர் என சிறப்பு வரிசை) என்கிற சிறப்பு நடிகர்கள் வரிசையில் சமீபத்திய வரவுகளில் முக்கிய சிறப்பு அந்தஸ்து சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே உண்டு …

அடுத்து எதிர்பார்ப்பு உள்ள படம் தார தப்பட்ட ….

இப்போதே போஸ்டர்களில் தூக்கும் கவர்ச்சியும் படம் பற்றி வெளியே கசியும் செய்தி களும் பரபரப்பாக உள்ளது … பாலாவுக்கே உரிய சிறப்பம்சங்கள் இருந்தாலும் முழுமை யாக ஒரு நிறைவு இருக்க வேண்டுமே என்கிற கவலை இருக்கிறது. இளைய ராஜா பாடல்களூம் பின்னணி இசையும் திரையில் வெற்றி பெற்று விடும் என நம்புவோமாக …

அடுத்து வருவது கதகளி … விஷால் பாண்டிராஜ் கூட்டணி … விஷால் நடிகர் சங்க வெற்றி எனும் அதிர்வுகளுடனும் பாண்டிராஜ் பசங்க 2 வெற்றி எனும் எதிர்பார்ப்பு களுடனும் வருகிறார்கள் .. டிரெயிலர் மற்றும் ஹிப் ஹாப் ஆதி இசை இரண்டும் எதிபார்ப்பை கூட்டுகிறது எனினும் விஷால் எனும் ஆம்பள போட்டீக்கு மல்லு கட்டி ஜல்லிக்க்கட்டு காளை போல வருவதாக முடிவெடுத்தாலும் பாண்டிராஜ் தேனாண்டாள் முரளீ போன்ற அறிவு அனுபவ கூட்டாளிகள் தனியாக வந்திருக்கலாம் என மனதில் படுகிறது …

வரிசையில் கடைசியில் இருந்தாலும் ஹாரீஸ் பாடல்களில் .. முன்னோட்டக் காட்சிகளில் தெரியும் சிறப்பம்சங்களில் … முதன்முறையாக அடிதடி நாயகன் எனும் போது வரும் எதிர்பார்ப்பில் … அனுபவம் மிக்க வினியோகஸ்தர்களின் ஆதரவில் கெத்து-க்கு ஒரு தனி எதிபார்ப்பு இருக்கத்தான் செய்கிறது … வழக்கம் போல ஒரு உதய நிதி படம் எனில் காணாமல் போய் இருந்திருக்கலாம் . ஏதோ இருக்கு என எதிர்பார்ப்பு கூடி இருப்பதால் கெத்து பந்தயத்துக்கு தயார் என மனதில் படுகிறது …இந்த கணிப்பு  என் மனதில் தோன்றும் கணக்கு … அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன் … சரியா ? தவறா ? காத்திருக்கிறேன் ..

சுபா வெங்கட்

1 thought on “பொங்கல் ரிலீஸ்! – எது? எப்படி? ஏன்?

Comments are closed.