September 18, 2021

பைரவா : விஜய் ரசிகர்களுக்கு படம் பிடிக்கும்!- மினி விமர்சனம்

பிரைவேட் பேங்கில் பணம் வாங்கிக்கொண்டு தராமல் ஏமாற்ற நினைக்கும் ரவுடிகளிடம் இருந்து பணத்தை வசூல் செய்யுள் வசூல் மன்னனாக வருகிறார் விஜய். தன்னோட பேங்க் மேனேஜர் (ஒய்.ஜி.மகேந்திரன்) மகள் திருமணத்தில் கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் விஜய்க்கு வழக்கம் போல் காதல் வருகிறது.அந்தக் காதலை சொல்ல போகும்போது ஒரு தல படத்தில் நாயகியை கொல்ல வருவார்களே. அதே மாதிரி கீ.சு. போட்டுத் தாக்க ஒரு கும்பல் முயல்கிறது..

bairavaa jan 12

அந்த சமயத்தில் விஜய்யிடம் தனது பிரச்னை அதாவது மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்டான தான் கண்டதை, கேட்டதை, அங்கு நடக்கும் அநியாயத்தை அதற்காக தான் சட்ட ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கையை எல்லாம் கூறுகிறார். இதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷை அந்த பிரச்சனையில் இருந்து விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

விஜய்யின் ஆரம்ப காட்சி ரசிகர்களுக்கு விருந்து. படத்தில் காமெடி காட்சிகள் பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை.
முதல் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சி கொஞ்சம் நீளமாக உள்ளது.

இரண்டாம் பாதி மெதுவாக நகர்கிறது அதற்கு காரணம் அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

இரண்டாம் பாதியில் வர சமுதாய கருத்து வரவேற்கத்தக்கது. பாடல்கள் கொஞ்சம் சுமார் தான் என்றாலும் பின்னணி இசை சுமார்

மொத்தத்தில் பைரவா :

விஜய் ரசிகர்களுக்கு படம் பிடிக்கும்.

பின் குறிப்பு:

வர வர டாப் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்து விட்டால் போது என்று முடிவு செய்து, பட உருவாகத்தில் அலட்சியம் காடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதற்கு விஜய்-யும் பலி கடா ஆகி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.