September 24, 2021

பேஸ் புக்கை புறக்கணித்து வரும் அமெரிக்க மக்கள்!

இப்போதைய காலகட்டத்தில் இன்டர்நெட்,ஃபேஸ்புக், ட்விட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நான் குளிக்கப் போகிறேன், சாப்பிடப் போகிறேன், தூங்கப் போகிறேன் என்று தாங்கள் செய்யும் அனைத்தையும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மக்கள் தெரிவிக்கின்றனர். பலர் அலுவலகத்திலும் வேலைக்கு இடையே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு அவர்களால் இந்த சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க முடியவில்லை.இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்றெல்லாம் எச்சரிக்கை வெளியான நிலையிலும் இந்தியாவில் பேஸ்புக் மோகம் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது.ஆனால் பேஸ்புக்-கிறகு அமெரி்க்க மக்களிடையே சமீப காலமாக செல்வாக்கு குறைந்து வருவதாக ஒரு கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
facebook-dislike_
இது குறித்து பிராங்க் என் மாஜிட் அசோசியேஸ்ட் நிறுவனம்நடத்திய கருத்த கணிப்பில் 2012-ம் ஆண்டில் 13 -17 வயதுக்குட்பட்டவர்களிடையே 95 சதவீதம் அளவிற்கு வரவேற்பை பெற்றிருந்தது. கடந்தாண்டு 94சதவீதமாக குறைந்த நிலையில் இந்தாண்டு 88 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் அனைத்து தரப்பு மக்களிடையே கடந்த ஆண்டு 93 சதவீதமாக இருந்த ஆதரவு இந்தாண்டு 90 சதவீதமாக குறைந்துள்ளது