September 26, 2021

பேஸ்புக் ஹெட் ஆபீசில் தன் அம்மாவை நினைத்து அழுத பிரதமர் மோடி! வீடியோ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க்குடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற கலந் துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. பேஸ்புக் தலைமையகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்க, ஃபேஸ்புக் குழுமத்தில் இருந்து 40,000-க்கும் மேற்பட்ட கேள்விகள் வந்து குவிந்தன. அமெரிக்காவில் காலை 09.30 மணிக்கும், இந்திய நேரப்படி, இரவு 10 மணிக்கும் தொடங்கியது.
modi amma
ஜூக்கர்பர்க் மோடிக்கு வெல்கம் சொல்லி பேசும் போது ”பேஸ்புக் வரலாற்றில் இந்தியா மிகவும் முக்கியமானது பேஸ்புக் நிறுவனமானது மிகவும் கடினமான நிலையை சந்தித்தபோது, இந்தியா தனக்கு உத்வேகம் அளித்தது. கொஞ்சம் விளக்கமாக சொலவதென்றால் 10 வருடங்களுக்கு முன்னதாக இந்தியா வந்து. சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் பயணம் செய்துள்ளேன். அரம்பக் காலக் கட்டத்தில் பேஸ்புக் நிறுவனமானது மிகவும் கடினமான நிலையை நோக்கி சென்றது, என்னுடைய நிறுவனத்தை விற்பனை செய்யும் நிலைக்கு சென்றேன், அப்போது என்னுடைய குரு மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்டீவ் ஜோப்ஸை சந்தித்தேன். அவர் என்னை இந்தியாவில் உள்ள கோவிலுக்கு செல்ல கேட்டுக் கொண்டார். எனவே நான் இந்தியாவில்உள்ள கோவில்களுக்கு சென்றேன். அந்த பயணமானது பேஸ்புக் நிறுவனத்தை, பல பில்லியன் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்றவேண்டும் என்ற எனது நம்பிக்கையை மிகவும் வலுப்படுத்தியது. எந்த ஒரு தொழிலையும் செய்வதற்கு முன்னதாக கோவிலுக்கு செல்வது ஒரு ஐடியா,என்றும் ஜூக்கர்பர்க் கூறினார்.

இடை மறித்த பிரதமர் மோடி ”ஜூக்கர்பர்க் மார்க் கதையை கேட்பதில் உலக மக்கள் மிகவும் அதிரச்சி அடைந்து இருக்கலாம், இந்தியாவில் உள்ள கோவிலில் நீங்கள் உத்வேகம் பெற்று உள்ளேன் என்று கூறி உள்ளார். இந்தியாவில் மிகவும் அதிகமான நம்பிக்கையானது உள்ளது. நீங்கள் இந்தியாவையை ஒரு கோவிலாக நினைத்து நம்பிக்கையுடன் வாருங்கள். உங்களுடைய அனுபவமானது நம்பிக்கையை காட்டும். இது இந்தியாவிற்கும் மிகவும் சிறப்பானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய மோடி, ‘மார்க்கின் பெற்றோருக்கு, உலகத்தையே ஒரே குடையின்கீழ் இணைத்த மார்க்கை பெற்றெடுத்தவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறி தன் பேச்சைத் தொடங்கினார்.

அப்போது மார்க் ஜூக்கர்பர்க், மோடியைப் பார்த்து, ‘நம் இருவருக்கும் இடையில் பொதுவான சில விஷயங்கள் உள்ளதாக உணர்கிறேன். நமக்கு குடும்பம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. எனது பெற்றோர் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். உங்களு டைய வாழ்க்கையிலும் உங்கள் தாயார் ஹீராபென் மோடி மிகவும் முக்கியமானவர் என்பதை அறிந்திருக்கிறேன். உங்கள் தாயாரைப் பற்றி ஏதும் கூற முடியுமா? என்று கேட்டார்.

உடனே,தன் தாயார் தன்னை வளர்ப்பதற்கு பட்டக் கஷ்டங்களை எல்லாம் நினைவு கூர்ந்து பேசிய பிரதமர் மோடி ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தார். ”நாங்கள் சிறு வயதினராக இருந்தபோது, எங்களை காப்பாற்ற எனது தாயார் அக்கம் பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவுவது, தண்ணீர் கொண்டு சேர்ப்பது போன்ற எடுபிடி வேலைகளை செய்து வந்தார். தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க மிகவும் கஷ்டப்பட்டார்.

இதைக் கூறியபோது,உணர்ச்சிப்பிழம்பாக மாறிய மோடி நா தழுதழுத்து கண்ணீர் வடித்தார். இதை கண்டு அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்த அரங்கமே ஓரிரு நிமிடம் நிசப்தமாக இருந்தது.

பின்னர், சுதாரித்துக் கொண்ட அவர், ”இது நரேந்திர மோடியின் வாழ்க்கையில் மட்டும் நடந்தது அல்ல; இந்தியாவில் உள்ள பல தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்காகவே தனது வாழ்க்கை யை தியாகம் செய்கின்றனர். எனது தாயாருக்கு இப்போது 90 வயதுக்கு மேல் ஆகின்றது. இன்றும் கூட அவரது வேலைகளை அவரே செய்து கொள்கிறார்.அவருக்கு படிப்பறிவு இல்லாத போதிலும், டி.வி.யில் செய்திகளை பார்த்து உலகில் என்ன நடக்கிறது? என்பதை தெரிந்து கொள்கிறார். இல்லா விட்டால், அவருக்கு எதுவும் தெரியாது. எனது உருவாக்கத்தில் என் பெற்றோர் மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர். நான் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். ரெயில் நிலையங்களில் டீ விற்றுக் கொண்டிருந்தவன் என்பது உங்களுக்கு அநேகமாக தெரிந்திருக்கும்.
12079466_1042997212387074_5996224118243984489_n
இந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், டீ விற்றவனை தனது தலைவராக தேர்வு செய்யும் என்பதை யாருமே கற்பனை செய்திருக்க முடியாது. எனவே, முதலாவதாக என்னைப் போன்ற ஒரு சாதாரண நபரை தங்களது சொந்தமாக்கிக் கொண்ட இந்தியர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என மோடி குறிப்பிட்டார்.

சந்திப்பின் முழு கேள்வி பதில் வீடியோ :

அம்மா பற்றிய மோடி பதில் மட்டும் பார்க்க; கேட்க: