October 19, 2021

பேஸ்புக் ரசிகர்கள் திறந்து வைத்த நடிகர் விஜய் சிலை!

பவேறு சர்ச்சைகளைத் தாண்டி தீபாவளி அன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரான ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முதல் நாளிலேயே ரூ.23 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் விஜய்க்கு சிலை வைத்து ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிக்காட்டியுள்ளனர்.இந்த சிலையை பேஸ்புக்கில் இயங்கி வரும் ‘Facebook Vijay Fans Club – FVFC’ என்ற பக்கத்தினர் நிறுவி இருக்கிறார்கள்.இதற்காக ஒரு லட்சம் ரூபாய் செலவானதாம்.
vijay staue oct 26
இன்று காலை 11 மணியளவில் இந்தச் சிலை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.தமிழ் நாட்டில் தற்போது உள்ள நடிகர் களில் சிலை வைக்கப்பட்ட முதல் நடிகர் விஜய் தான். மேலும் இப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவான கருத்துகள் பரவி வருகின்றன. அதே நேரத்தில் விஜய் பேசும் வசனங்களையும், அவர் நடித்த கோலா விளம்பரங்களையும் சுட்டிக் காட்டி கலாய்த்தும் வருகின்றனர்.