September 20, 2021

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரசாரமா?தேர்தல் ஆணையம் கிடுககிபிடி!

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும் வாக்காளர்களை கவர்வதற்காக இணையதளங்கள், சமூக வலைதளங்களிலும் கட்சிகள், வேட்பாளர்கள் விளம்பரம் செய்கின்றனர். இதை வரன்முறைப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதிலும் அண்மையில் நகர்ப்புற வாக்காளர்களில் 37% பேர் பெரும்பாலான நேரங்களில் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் அதாவது ஆன்லைன்வாசிகள் என்று கூகுள் இந்தியாவின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
26 - Google_survey_
இந்நிலையில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளுக்கு நேற்று அது அனுப்பியுள்ள உத்தரவில்….

* இணையதளங்கள், இணையதளங்கள் சார்ந்த ஊடகங்கள், பேஸ்புக், யூ டியூப், ட்விட்டர், பிளாக் போன்ற சமூக வலைதளங்கள் போன்றவற்றில், எந்த அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல் விளம்பரங்கள் வெளியிடக் கூடாது.

* இவற்றில் வெளியிடப்படும் விளம்பரங்கள், தகவல்களுக்கு கொடுக்கப்படும் கட்டணம், இவற்றை தயாரிப்பதற்காக செய்யப்படும் செலவு ஆகியவற்றை கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்.

* கட்சிகள், வேட்பாளர்களை தவிர்த்து, மற்றவர்களோ அல்லது நிறுவனங்களோ, அமைப்புகளோ வெளியிடும் தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்கள், விளம்பரங்களை கையாள்வது பற்றி மத்திய தகவல் தொடர்பு மற்றும் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

* தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய இ&மெயில் முகவரி மற்றும் சமூக வலைதளங்களின் கணக்கு விவரங்களை படிவம்&26ல் அளிக்கப்படும் வாக்குமூலத்தில் குறிப்பிட வேண்டும்.

* வெளிப்படையான தேர்தல் அணுகுமுறைக்காகவும், பாரபட்சமற்ற செயல்பாடு இருக்க வேண்டும் என்பதற்காகவும், இணையதளங்களும், சமூக வலைதளங்களும் மின்னணு ஊடக விதிமுறைகளின் கீழ் வருவதாலும் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Election Commission Issues Social Media Guidelines For Election Campaigning;
***********************************************************************
Thanks to the upcoming general elections, all of our social media stream is full of paid hashtags and campaigns. India’s election watchdog has now shared a model code of conduct that parties and candidates need to abide by for campaigns on social media and the Internet.