பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் – தேர்தல் கமிஷன் கெடுபிடி!

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் முன்பு, ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அரசியல் கட்சிகள் முன்அனுமதி பெற வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
social-media-power
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், புதன்கிழமையன்று தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,”நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வந்தது. இதையடுத்து அதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அக்கட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்து விளக்கம் அளித்தனர். சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பு ‘ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக் குழு’ அனுமதியும் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்தக் குழுவிடம் அனுமதி பெற்ற பிறகே சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.கவுக்கு அறிவுறுத்தினேன். இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்.”