October 18, 2021

பேஸ்புக்கில் துப்பாக்கி சேல்ஸூக்கு தடை!

‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நிலையில் பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் எனப்படும் ஆன்லைன் மூலம் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில் அதை ஒழிக்க அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிபர் ஒபாமா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று ‘பேஸ்புக்’ மூலம் துப்பாக்கி விற்பனை செய்ய தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை ‘பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் வெளியிட்டார்.
face jan 31
இதுகுறித்து ஜூகர்பெர்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சமூக வலைதளங்களில் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும் வகையில் புது புது வசதிகள் மற்றும் தொழில் நுட்பங்களை தொடர்ந்து உருவாக்கி அளித்து வருகிறோம். அதே நேரத்தில் மனிதகுல நன்மைக்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியுள்ளது. எனவே தனி நபர்கள் ஒருவருக்கொருவர் துப்பாக்கிளை விற்பனை செய்வதற்கு தங்க ளது வலைதளத்தில் தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே போதைப் பொரு ளான மாரிஜுவானா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப் போது துப்பாக்கி போன்ற ஆயுத பரிவர்த்தனை, விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக ஃபேஸ் புக் நிறுவனத்தின் பொருள் விற்பனைக்கான கொள்கை வகுக்கும் பிரிவின் தலைவர் மோனிகா பிகெர்ட் தெரிவித்துள்ளார்.