September 18, 2021

பேஸ்புக்கில் ஆட்டோமேட்டிக்கா ஓடற வீடியோவை ஸ்டாப் பண்ணனுமா?

அடிக்கடி ஏதாச்சும் புது முயற்சியையும் பார்ட் பார்டாக பகுதியாக அறிமுகப்படுத்துவதுதான் பேஸ்புக், இந்த முறை பயனர்களின் டைம்லைனில் வரும் வீடியோக்களை கிளிக் செய்யா மலேயே ஓடும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் பயனர்கள் ப்ளே செய்யாமல், மவுஸ் அந்த வீடியோவின் மேல் பட்ட உடனேயே, தானாக வீடியோ ஓடத்தொடங்கும். இதுவும் வழக்கம் போல் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனாக்க’இந்த நியூ முறையால் எனக்குகுத் தெரியாமலேயே டேட்டா வீணாகிறது’ என்று நீங்க அப்செட் ஆகியிருந்தீங்க இல்லையா?.
facebook vedio
இப்ப இதை எப்படி ஸ்டாப் பண்ணுவதுன்னு தெரிஞ்சுக்கங்க!

உங்களின் பேஸ்புக் பக்கத்தில் செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்யுங்க. அதோட இடது கீழ் ஓரத்தில் இருக்கும், வீடியோஸ் (Videos) மெனுவை க்ளிக் செய்யுங்க. அதுலே ரெண்டு பிரிவுகள் தோன்றும். அதில் இரண்டாவதாக இருக்கும் ‘ஆட்டோ ப்ளே வீடியோஸ்’ (Auto play Videos) க்ளிக் செய்யுங்க.அதுலே இருக்கும் மூன்று விருப்பத் தெரிவுகளில் ஆஃப் (off) என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இனி உங்கள் டைம் லைனிலே தேவையற்ற வகையில் வீடியோ ப்ளே ஆகி, இணைய டேட்டா வீணாகாது.. ஓ. கே-வா?