September 24, 2021

பேஸ்புக்காளிகளின் மனநிலைப் பற்றி கூறும் லேட்டஸ்ட் ஆய்வு ரிசல்ட்!

முன்னெல்லாம கல்லூரி செல்லும் மாணவர்களும், ஐடி துறையில் இருப்பவர்களும் மட்டுமே சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்திய காலம் போய் இன்றைக்கு கோடிக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியும், பார்வையிட்டும் வருகின்ற னர். அதில்ய்ம் மழை பெய்தால் ஸ்டேட்டஸ், தும்மினால் ஸ்டேட்டஸ் என அப்டேட் செய்து அதற்கு லைக் கேட்டு காத்திருக்கும் காலம் அதிகரித்து விட்டது. அதிகம் ‘லைக்’ கிடைத்தால் மகிழ்ச்சியும், யாருமே ‘லைக்’ போடாவிட்டால் மன அழுத்தமும் ஏற்படுகிறது இவர்களுக்கு. ஆர்வத்தில் தொடங்கிய இந்த பழக்கம் படிப்படியாக இதிலிருந்து மீளவே முடியாத அளவிற்கு வலைத்தளங்களின் வலை யில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் பெற்றோர்களுடனான பேச்சு குறைவதோடு, படிப்பும் பாழாகி விடுகிறது என்று ஏற்கெனவே நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
Facebook-Likes
இந்நிலையில் பேஸ்புக்கில் நீங்கள் பதியும் ஒவ்வொரு நிலைத்தகவலும் உங்களைப் பற்றி, உங்கள் மனநிலை பற்றி மற்றவர்களுக்கு தெளிவாக தெரிவிக்கிறது என்று உரத்தக் குரலில் தெரிவிக்கிற ஓர் ஆய்வு.

லண்டனில் உள்ள பிரனல் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு சொல்வது இதுவே: “உங்கள் நிலைத் தகவல்கள் உங்கள் மனநிலையின் பிம்பங்கள்”

அவ்வாய்வு முடிவின் சில பாயிண்ட்ஸ்:

* நீங்கள் அடிக்கடி மனித உறவு தொடர்பான நிலைத்தகவல்களை பதிவு செய்பவரா? அப்படியென்றால் நீங்கள் உங்கள் உற வுநிலை குறித்து ஒருவித பாதுகாப்பற்ற, பதட்ட நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். அதாவது, நீங்கள் அடுத்தவரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க விரும்புகிறீர்கள், பிறர் ஆதரவு தேடுகிறீர்கள் என்று அர்த்தமாக்கும்.

* நீங்கள் அடிக்கடி ஃபிட்னஸ் குறித்த பதிவுகளோ, ஆரோக்கிய வாழ்வு சம்பந்தமான பதிவுகளோ பதிந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு ஹைசொசைட்டி என்கிறது அந்த ஆய்வு. உங்கள் எண்ணமெல்லாம் லைக்ஸ், கமென்ட்ஸ் பற்றி மட்டுமே இருக்கிறதாம். அதாவது, ‘நான்’ என்பதை அடிக்கோலிட்டு காட்டவே நீங்கள் முயல்கிறீர்கள் என்று அர்த்தமாக்கும்.

* அட இது வரை யாருமே தொடாத ஒரு விஷயத்தை நீங்கள் எப்போதுமே முதலில் முன் வைக்கிறீர்கள் என்றால், ‘இவர் வித்தியாசமானவர்’ என அறியப் பட விரும்புகிறீர்கள் என்று அர்த்தமாக்கும்.

* பேஸ்புக்கில் நீங்கள் தற்பெருமை பேசும் தனிநபர் என்றால் உங்களுக்கு ‘தற்காதல்’ (narcissistic) அதிகம்” என்கிறது அந்த ஆய்வு.

இப்படி பேஸ்புக்காளின் மனநிலைப் பற்றி கூறும் இந்த ஆய்வு முடிவில், “ஃபேஸ்புக்கில் அதிகம் லைக்கப்படுபவர்கள் சமூகத்தில் ஓர் அடையாளத்தை பெற்று விட்ட பெருமிதத்தையும், ஒரு லைக்கு கூட பெற முடியாதவர்கள் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப் பட்ட வெறுமை உணர்வையும் பெறுகின்றனர்” என்று கண்டறியப்பட்டுள்ளது.