September 29, 2021

பேய்கள் ஜாக்கிரதை படப்பாடலில் ஆம் ஆத்மியை அட்டாக் செய்திருக்கிறேனா? – கபிலன் வைரமுத்து விளக்கம்!

ஸ்ரீசாய் சர்வேஷ் எண்டர்டைன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் ஜி.ராகவன் தயாரித்துள்ள படம் பேய்கள் ஜாக்கிரதை.இதில் நாயகனாக ஜீவரத்னம் நாயகியாக ஈஷான்யா நடித்துள்ளனர். தம்பிராமையா, நரேஷ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், தருண்குமார், பிளாக் பாண்டி ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்தை கண்மணி இயக்குகியுள்ளார். இவர் சரணிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். தெலுங்கில் நிறைய படங்கள் இயக்கியுள்ளார். படம் பற்றி அவரிடம் கேட்ட போது, “இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும் பேய்களை நம்புபவன் மூடன் என்று கூறும் ஒரு கதாபாத்திரமும் சந்திக்க நேர்கிறது. இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவமும் நடக்கிறது. அச்சம்பவம் எதனால் நடைபெறுகிறது. அதற்கு பின் அவர்கள் எதிர் கொள்ளும் குழப்பங்கள் என்ன என்பது கதை, காமெடி படமாக தயாராகி இருக்கிறது” என்றார்.
peigal jak oct 5
அறிமுக இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு இசையமைத்துள்ள. இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியிருக்கின்றன. இதில் கவிஞர் கபிலன் வைரமுத்து இரண்டு பாடல்களை எழுதி யிருக்கிறார். “பயமுறுத்தும் பழங்கதைகள் புடிச்சிருக்கு நோக்கு, பகுத்தறிவு புகட்டுகிற நோக்கமில்லை நேக்கு” என்று தொடங்குகிறது படத்தின் புரோமோ சாங். இப்பாடலின் வரும் “வேப்பமரம் சாஞ்சாலும் வெளக்கமாரு ஜெயிச்சாலும் பேய்கள் ஜாக்கிரதை” என்ற வரியில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பம் (வெளக்கமாரு) இடம்பெறுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. ஆனால் அக்கட்சியின் பெரும்பாலான நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கின. இந்த நிலையில் “வெளக்கமாரு ஜெயிச்சாலும் பேய்கள் ஜாக்கி ரதை” என்று கபிலன் எழுதியிருப்பது அரசியல் நையாண்டியாக பார்க்கப்படுகிறது. இது குறித்து கபிலன் வைரமுத்து அளித்திருக்கும் விளக்கத்தில் “பேய்களை வெளக்கமாரு கொண்டு ஓட்டி னாலும் அவை மறுபடியும் வரலாம் என்று படத்திற்கு பயன்படும் ஃபேண்டஸி அர்த்தத்தில்தான் நான் எழுதியிருக்கிறேன். இதைப் பாடலாக எடுத்துக் கொள்வதும் அரசியலாக கருதுவதும் அவரவர் பார்வையைப் பொருத்தது” என்று பதிலளித்திருக்கிறார்.