September 20, 2021

பென்சன் சலுகை கோரும் பாலியல் தொழிலாளர்கள் -நெதர்லான்நதில் வழக்கு!

நெதர்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொண்ட பாலியல் தொழிலாளர்கள் வரி கட்டவேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது.ஆனால் அது போதவில்லை என்பதுடன் தங்களுக்கு கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அதே மாதிரியான பென்சன் சலுகைகளும் உரிமைகளும் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
Prostitue in netherland owl 19
நெதர்லாந்து நாட்டில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களில் ஒரு மாதத்துக்கு 5,000 யூரோக்கள் வரை வருமான வரி விலக்குடன் போட்டுவைக்கலாம்.நெதர்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்து கொண்ட பாலியல் தொழிலாளர்கள் வரி கட்டவேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது.ஆனால் அது போதவில்லை. ஆகவே பாலியல் தொழிலாளர்களும், கால்பந்து விளையாட்டு வீரர்களைப் போலவே தங்களது ஓய்வூதிய திட்டத்தில் சேமிக்க வரிவிலக்கு கேட்டு வருகின்றனர்.

பாலியல் தொழிலாளர்களும், கால்பந்து விளையாட்டு வீரர்களைப் போலவே, தங்களது இளமையில், கடுமையான உடல் சார்ந்த உழைப்பில் ஈடுபடுகிறார்கள், அவர்களது தொழிலும், அதிக காலம் நீடிப்பதில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.