September 20, 2021

பெண் வன்கொடுமை வழக்குகளில் 9 சதவீதம் தவறானவை: உள்துறை தகவல்!

நாம் வாழும் இந்தியத் தலைநகரமான டெல்லியில் தினந்தோறும் 5 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்கள்… 10 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்’ என்ற புள்ளி விவரத்தை டெல்லி போலீஸே வெளியிட்டிருந்தது..2012ல் டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, எத்தனையோ போராட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நிர்பயா தொடர்பான திரைப்படம், நிர்பயா திட்டம் என்று என்னென்னவோ நிகழ்ந்து விட்டன. ஆனாலும், நிர்பயாவுக்கு நேர்ந்தது மாதிரி டெய்லி ஊடகங்களில் மூன்றுக்கும் குறையாத செய்தி இடம் பெறுவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அல்லது துன்புறுத்துதல் தொடர்பான வழக்குகளில் 9 சதவீதம் தவறானவை என மாநிலங்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
women rape 13
இது குறித்து உள்விவகார துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி எழுத்துபூர்வமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசும்போது, ”நாட்டில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ள ஐ.பி.சி.யின் சட்ட பிரிவுகளில் (498ஏ) இதுவும் ஒன்று என கூறும் வகையில் நேரடி சான்றோ அல்லது அது குறித்த ஆய்வோ இல்லை”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேசிய குற்ற பதிவு அமைப்பின் தகவல்களை மேற்கோள் காட்டி அவர் பேசும்போது, ”போன 2013ம் ஆண்டில், கணவர் அல்லது அவரது உறவினர்களால் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக, ஐ.பி.சி.யின் சட்ட பிரிவு 498ஏயின் கீழ், மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 866 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சட்ட பிரிவு கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளை குறித்த வழக்குகளுடன் தொடர்புடையது.இந்த வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த 2012ம் ஆண்டில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 527 ஆகவும் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் 99 ஆயிரத்து 135 ஆகவும் இருந்துள்ளது.

இதைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் விசாரணையையடுத்து இந்த வழக்குகளில், 2011ம் ஆண்டில் 10,193, 2012ம் ஆண்டில் 10,235 மற்றும் 2013ம் ஆண்டில் 10,864 ஆகியவை தவறானவை அல்லது உண்மை அல்லது சட்டத்தில் உள்ள தவறுகளால் பாதிப்பிற்குள்ளானவை என்று தெரிய வந்தது”என்று தெரிவித்துள்ளார்