October 16, 2021

பெண் மேக்-அப் கலைஞர்கள் விவகாரம்:சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

பாலிவுட் எனப்படும் ஹிந்தி திரையுலகில் பணியாற்றும் மேக்-அப் கலைஞர்கள் மற்றும் முடி திருத்துவோருக்காக சி.சி.எம்.ஏ.ஏ. என்ற சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சங்கத்தில் பெண் மேக்-அப் கலைஞர்கள் யாரும் பதிவு செய்ய முடியாது. இந்த சங்கத்தில் பதிவு செய்யாதவர்கள் யாரும் இந்தி திரையுலகில் பணியாற்ற முடியாது.இந்த நடைமுறை பாலிவுட் திரையுலகில் கடந்த 59 ஆண்டுகளாக அமலில் இருந்தது. இதனால் பெண் மேக்-அப் கலைஞர்கள் ஹிந்தி திரையுலகில் நுழைய முடியாமல் இருந்தனர்.இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள், பாலிவுட் திரையுலகில் பெண் மேக்-அப் கலைஞர்கள் பணிபுரிவதற்கு சி.சி.எம்.ஏ.ஏ. போட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
woman make-up-artists_
ஹிந்தி திரையுலகில் பணியாற்றும் மேக்–அப் கலைஞர்கள் மற்றும் முடி திருத்துவோருக்காக சி.சி.எம்.ஏ.ஏ. என்ற சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சங்கத்தில் பெண் மேக்–அப் கலைஞர்கள் யாரும் பதிவு செய்ய முடியாது. இந்த சங்கத்தில் பதிவு செய்யாதவர்கள் யாரும் ஹிந்தி திரையுலகில் பணியாற்ற முடியாது.இந்த நடைமுறை ஹிந்தி திரையுலகில் கடந்த 59 ஆண்டுகளாக அமலில் உள்ளது. இதனால் பெண் மேக்–அப் கலைஞர்கள் hiந்தி திரையுலகில் நுழைய முடியாமல் இருந்தனர்.

இந்தநிலையில் சாரு குரானா என்ற பெண் மேக்–அப் கலைஞர் hiந்தி திரையுலகில் பணிபுரிவதற்காக சி.சி.எம்.ஏ.ஏ.வில் பதிவு செய்ய கடந்த 2009–ம் ஆண்டு விண்ணப்பித்தார். ஆனால் அவர் பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சாரு குரானா, மேலும் சில பெண் கலைஞர்களுடன் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்து வந்தது.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், hiந்தி திரையுலகில் பெண் மேக்–அப் கலைஞர்கள் பணிபுரிவதற்கு சி.சி.எம்.ஏ.ஏ. போட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறும்போது, ‘திரையுலகில் பாலின பாகுபாடு காரணமாக போடப்பட்டுள்ள இந்த தடை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அந்தவகையில் 21–ம் நூற்றாண்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் இப்படியொரு அநீதி, நினைத்து பார்க்க முடியாததும், ஏற்கமுடியாததும் ஆகும். இது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும்’ என்று தெரிவித்தனர்.