September 25, 2021

பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தால் ஓட்டு – ஹரியானா இளைஞர்கள் அலம்பல்!

அரியானா மாநிலத்தில் ஆண் பெண் விகிதத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இதனால், இளைஞர்களுக்கு பெண் பார்த்து திருமணம் செய்வது மிகப்பெரிய வேலையாக உள்ளது. திருமணமாகாத ஆண்கள் எல்லாம் சங்கம் அமைத்து, ‘எங்களுக்கு பெண் பார்த்து கொடுத்தால் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்’ என்று அரசியல்வாதிகளிடம் கூறி வருகின்றனர்.
marriage_hands. mar 15
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இறுதிப் பட்டியல் படி ஆண்-பெண் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலமாக ஹரியாணா பட்டியலிடப்பட்டுள்ளது. ஹரியாணாவில் 1000 ஆண்களுக்கு 879 என்ற எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனர். அதையடுத்து ஜம்மு காஷ்மீரில் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள், பஞ்சாபில் 1000 ஆண்களுக்கு 895, உத்தரப்பிரதேசத்தில் 912, பிகாரில் 918 என பெண்கள் எண்ணிக்கை உள்ளது.

ஆண்-பெண் விகிதம் அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளம் முதலிடம் பெற்றுள்ளது. இங்கு 1000 ஆண்களுக்கு 1,084 என்ற எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனர். அதையடுத்து முறையே தமிழகம் (1000-க்கு 996 பெண்கள்), ஆந்திரம் (1000-க்கு 993 பெண்கள்), சத்தீஸ்கர் (1000-க்கு 991), ஒடிசா (1000-க்கு 979) ஆகிய மாநிலங்கள் பட்டியலில் அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.ஒட்டுமொத்தமாக நாட்டில் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என்ற விகிதாசாரம் நிலவுகிறது

இதனிடையே நாட்டிலேயே ஆண்-பெண் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலமாக ஹரியாணாவில் 1000 ஆண்களுக்கு 877 பெண்கள் மட்டுமே உள்ளனர். இப்போதும் இங்குள்ள கிராமங்களில் பெண் குழந்தைகளை கருச்சிதைவு செய்து விடுகின்றனர். இது குறித்து கிராமவாசி ஒருவர் கூறும்போது, ‘பெண் குழந்தைகளை கருச்சிதைவு செய்வதால் பெண்களின் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. மேலும், எங்கள் ஊர் இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு இல்லாததாலும் திருமணம் தள்ளி போகிறது. இதை தடுக்க அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தற்போது முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா வாக்கு சேகரிக்கும்போது இளைஞர்களை கவருவதற்காக உங்களுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி ஓட்டு கேட்பார் என்று எதிர்பார்க்கபடுகிஅது