April 12, 2021

பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு நீக்கம்

சென்னை புறநகர் ரயில்களில் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு நீக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பெண் பயணிகள் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் நேரக்கட்டுப்பாடின்றி அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம்.

பெண்களுடன் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களும் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் மார்க்க ரயிலும் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.